பேராசிரியர் ஷானிக்கா ஹிரிம்புரேகம மற்றும் பங்களாதேஷ் தூதுவரும், யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. கோண்ட்கர் எம். தல்ஹா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

பேராசிரியர் ஷானிக்கா ஹிரிம்புரேகம மற்றும் பங்களாதேஷ் தூதுவரும், யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. கோண்ட்கர் எம். தல்ஹா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

பேராசிரியர் ஷானிக்கா ஹிரிம்புரேகம மற்றும் பங்களாதேஷ் தூதுவரும், யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. கோண்ட்கர் எம். தல்ஹா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று 2021 டிசம்பர் 22ஆந் திகதி பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது.

வாணிபம் மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒத்துழைப்புக்கான பரஸ்பர நலன் சார்ந்த பகுதிகள் குறித்து இரண்டு தூதுவர்களும் கலந்துரையாடினர். மேலும், பங்களாதேஷில் உள்ள பல இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புக்கள் குறித்தும் இரண்டு தூதுவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

2021ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக தூதுவர் ஹிரிம்புரேகம பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்ட இரண்டு தூதுவர்களும் மாணவர் புலமைப்பரிசில்கள், ஆய்வு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் சாத்தியமான ஒத்துழைப்புக்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இலங்கைத் தூதரகம்,

பரிஸ்

2022 ஜனவரி 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close