பெங்களூரு - 2021 புதுமையான சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கை பங்கேற்பு

 பெங்களூரு – 2021 புதுமையான சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கை பங்கேற்பு

சர்வதேச அரங்கில் தனது திரைப்படத் துறையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து, 2021 அக்டோபர் 14 முதல் 17 வரை பெங்களூரில் உள்ள ஜே.டப்ளிவ். மரியட் ஹோட்டல் மற்றும் புதுமையான மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் நடைபெற்ற புதுமையான சர்வதேச திரைப்பட விழாவின் 4வது பதிப்பில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகராலயம் முதன்முறையாக இலங்கைத் திரைப்பட வல்லுநர்கள் குழுவை ஏற்பாடு செய்தது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான புதுமையான சர்வதேசத் திரைப்பட விழா, பங்கேற்கும் நாடுகளின் திரைப்படக் கலை மற்றும் கலாச்சாரங்களை ஊக்குவித்து, பல்வேறு நாடுகளில் இணைத் தயாரிப்பு வாய்ப்புக்களுடன் சர்வதேசத் திரைப்படத் துறைக்கு ஒரு வலையமைப்புத் தளத்தை உருவாக்கும் வகையில் பல ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள புதுமையான திரைப்பட அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில் இலங்கை அமர்வை 16ஆந் திகதி தொடங்கி வைத்த துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி. வெங்கடேஸ்வரன், புகழ்பெற்ற சந்திப்பிற்கு உத்வேகம் அளித்து, இலங்கை அவர்களுக்குப் பிடித்த திரைப்பட இலக்கு நாடாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டினார். அவரது கருத்துக்களைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் சமிந்த முனசிங்க, பிரேம்ஸ் டிவி மற்றும் பிலிம்ஸின் திரைப்பட இயக்குனர் ஷ்யாமன் பிரேமசுந்தர, சேர்க்கிள் 360 இன் முகாமைத்துவப் பணிப்பாளர் யசஸ் ரத்நாயக்க, படப்பிடிப்புக்கான குழுத் தயாரிப்பாளர் பிரியங்க குமாரசிறி மற்றும் திரைப்பட இயக்குனர் சத்ர டயஸ் வீரமன் ஆகிய ஐந்து பேர் கொண்ட இலங்கைத் தூதுக்குழு, சர்வதேச திரைப்படங்களை இலங்கையில் படமாக்கிய வரலாறு, தீவின் இயற்கைக்காட்சி இடங்கள், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான சலுகைகள் பற்றிய விரிவான விளக்கத்தை அளித்தார்.

வலையமைப்பு அமர்வில், புதுமையான திரைப்பட அகடமியின் நிறுவனர் திரு. சர்வன பிரசாத் மற்றும் புதுமையான திரைப்பட அகடமியின் படைப்பாக்கப் பணிப்பாளர் திருமதி. உபாசனா மிட்டல் ஆகியோர் அதிக பொழுதுபோக்கு வாய்ப்புக்களைக் கவர்ந்து, கலந்துரையாடலில் கலந்து கொண்ட பயனுள்ள மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு இலங்கைப் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினர். இலங்கை அமர்வில் கலந்து கொண்ட தெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் திரு. அல்லு அரவிந்த் நட்புரீதியாக தொடர்புகொண்டதுடன், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு துணை உயர்ஸ்தானிகர் விடுத்த அழைப்பின் பேரில், அவர் தனது வரவிருக்கும் படைப்புக்களுக்காக இலங்கையை ஆராய்வதற்கு விருப்பம் தெரிவித்தார்.

இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற நான்கு நாள் திருவிழா கவர்ச்சியானதொரு நிறைவு விழாவுடன் நிறைவடைந்தது. விழாவின் போது, சத்ரா டயஸ் வீரமன் இயக்கிய 'ஆயு' என்ற புதிய சிங்களத் திரைப்படத்திற்கு சிறந்த ஆசியப் படமாக விருது வழங்கப்பட்டது.

புதுமையான சர்வதேசத் திரைப்பட விழாவின் 4வது பதிப்பின் போது, முன்னணித் திரைப்படத் தயாரிப்பாளர்கள், பிரபலங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்படச் சங்கங்கள் மற்றும் 30 பல்வகைப்பட்ட நாடுகளிலிருந்து இராஜதந்திரிகள் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 75 சர்வதேச திரைப்படங்கள் 45 மொழிகளில் திரையிடப்பட்டது.

இலங்கைத் தூதுக்குழுவானது இலங்கையின் துணை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாம் செய்லாளர் (வணிகம்) திலங்கா ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் சாமந்தி முனசிங்க ஆகியோரினால் ஒருங்கிணைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கையின் துணை உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2021 அக்டோபர் 25

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close