தூதுவர், இராஜதந்திரிகள் மற்றும் தூதரக ஊழியர்களின் பங்குபற்றுதலுடன், பிரான்ஸ் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய, தூதரக வளாகத்தில் காலை 9.00 மணியளவில் இந்த விழா நடைபெற்றது.
விழாவின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், யுனெஸ்கோவுக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான பேராசிரியர் ஷானிக்கா ஹிரிம்புரேகம தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
ஊழியர்களால் தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி, தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்கள் மற்றும் ஏனையவர்களை நினைவு கூர்ந்தனர்.
அரச சேவைக்கான உறுதிமொழி சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன பின்னர், தூதரக ஊழியர்களுக்கு மத்தியில் உரையாற்றிய தூதுவர், அவர்களது விலைமதிப்பற்ற சேவைகளுக்காக நன்றிகளைத் தெரிவித்ததுடன், 'நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செழிப்பான பார்வை' என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய தயாரிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டிலும் அதே உணர்வுடன் தொடர்ந்தும் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் லெப்டினன்ட் கேணல் சூலா ரத்நாயக்க தமிழ் மொழியில் புத்தாண்டு வாழ்த்துக்களையும் ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்தி உரையாற்றினார்.
கிரிபத் மற்றும் இலங்கையின் இனிப்பு வகைகள் பரிமாறப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்வு நிறைவுற்றது.
இலங்கைத் தூதரகம்,
பாரிஸ்
2022 ஜனவரி 04