தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட்களை இலங்கைக்கு கையளிப்பு

தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட்களை இலங்கைக்கு கையளிப்பு

தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட் பெறுமதியான காசோலையை தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்காப்பின் நிரந்தரப் பிரதிநிதியான சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன அவர்களிடம் 2022 ஏப்ரல் 25ஆந் திகதி பேங்கொக்கில் உள்ள பாராளுமன்றத்தில் வைத்து கையளித்தார்.

இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எடுத்த தனது முயற்சிக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவித்த அதேவேளையில், ரத்தனகோசின் காலத்திலிருந்து பௌத்தத்தின் அடிப்படையில் தாய்லாந்துடன் நீண்டகால உறவை வளர்த்துக் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே என தேசிய சபையின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் குறிப்பிட்டார். இலங்கை ஒரு நெருக்கடியை எதிர்நோக்கும் போது, தாய்லாந்து அரசியல்வாதிகள் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் மற்றும் செனட்டர்கள் இலங்கைக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் அவர் மேலும் கலந்துரையாடினர். 700,000 தாய் பாட் நன்கொடையானது அதிகமானதொரு தொகை இல்லை, எனினும் இது கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் உண்மையான நண்பர்களின் உணர்வை பிரதிபலிக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

மிகவும் வணக்கத்திற்குரிய சோம்டெட் ஃபிரா மகா திரச்சன், வாட் ப்ரா சேதுஃபோன் விமன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான் மடாதிபதி மற்றும் தாய்லாந்தின் சங்க உச்ச சபையின் குழு ஆகியவை தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, அனைத்து மனிதர்களிடையேயும் கருணை மற்றும் ஆதரவின் நேர்மறையான அறிகுறி இருப்பதாக வலியுறுத்தினார். சோம்டெட் ஃபிரா மகா திரச்சன் அனைத்து மதங்களின் நலம் விரும்பிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தூதுவர் சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன தேசிய சட்டமன்றத்தின் தலைவர் மற்றும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மற்றும் பௌத்த சங்கங்கள், தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள்  சபை மற்றும் அனைத்து நலன் விரும்பிகளுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மிகவும் வணக்கத்திற்குரிய ஃபிராப்ரோம்சேனபோடி, வாட் பாத்தும் கோங்காவின் மடாதிபதி மற்றும் தாய்லாந்தின் சங்க உச்ச சபையின் குழு, நேபாளம், தம்மதுதா இந்தியா - நேபாளம் மற்றும் வாட் தாய் புத்தகயாவின் மடாதிபதி, செனட் செயலகத்தின் சர்வதேச விவகாரக் குழுவின் செனட்டர் பிகுல்கேவ் க்ரைரோக், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளான கலாநிதி. இஸ்ஸரா செரீவத்தனாவுத் மற்றும் ஓங்கார்ட் கிளம்பைபூன் ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டனர். தூதுவருடன் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஏ.டபிள்யூ.எஸ். சமன்மாலியும் இணைந்திருந்தார்.

இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 மே 5

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close