தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரும், யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்னவுக்கு, 2021 நவம்பர் 04ஆந் திகதி பேங்கொக்கில் உள்ள துசித் அரண்மனை அம்பாரா வில்லாவில் வைத்து நற்சான்றிதழை கையளிக்கும் தருணத்தில் தாய்லாந்து இராச்சியத்தின் அரசர் மஹா வஜிரலோங்கொர்ன் ஃபிரா வஜிரக்லாச்சோயுஹூவா அரச மரியாதையை வழங்கினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த அரசர் மஹா வஜிரலோங்கொர்ன் ஃபிரா வஜிரக்லொச்சோயுஹூவா, இலங்கையுடனான வலுவான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்தார். மேலும், இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமிந்த கொலொன்னவுக்கு அரசர் மஹா வஜிரலோங்கொர்ன் ஃபிரா வஜிரக்லொச்சோயுஹூவா வாழ்த்துக்களைத் தெரிவித்த அதே வேளை, தூதுவர் தனது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பணியை நிறைவேற்றுவதற்குமான அரசரின் முழுமையான ஆதரவையும் உறுதியளித்தார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து மன்னர் மஹா வஜிரலோங்கொர்ன் ஃபிரா வஜிரக்லாவ்சாயுஹூவாவுக்கான அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் சமிந்த கொலோன்ன, இராச்சியத்துடன் சிறந்த நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்குமான தனது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் உறுதியளித்தார். மேலும், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு மேன்மை தங்கிய மன்னருக்கு தூதுவர் கொலோன்ன அழைப்பு விடுத்தார்.
வியட்நாம், ஸ்லோவாக்கியா, கென்யா, துருக்கி மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அன்றைய தினம் தமது நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்.
தூதுவர் கொலொன்ன கம்போடியா இராச்சியம் மற்றும் லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு ஆகியவற்றிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தூதுவராவார்.
இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
பேங்கொக், தாய்லாந்து
2021 நவம்பர் 08