திருமணமாகாத நிலையினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • திருமணமாகாத அந்தஸ்தினை உறுதி செய்வதற்காக விண்ணப்பதாரரினால் அல்லது பெற்றோர்களினால் / உடன் பிறந்த சகோதரர்களினால் / சகோதரிகளினால் சத்தியப் கூற்றுறொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். சத்தியப் கூற்றில் விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டு இலக்கத்தை குறிப்பிடுவது கட்டாயமானதாகும். (வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான திருமணமாகாத அந்தஸ்தினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது).
  • விண்ணப்பதாரி இலங்கையில் திருமணமாகாதவராக இருந்தார், திருமணம் செய்து கொள்வதில் எந்த விதமான சட்டப் பிரச்சினைகளும் இல்லை மற்றும் குறித்த விண்ணப்பதாரியின் குடும்ப உறவினர்கள் தொடர்பான விபரங்கள் போன்றவை சத்தியக் கடதாசியில் குறிப்பிடப்படுதல் வேண்டும். சத்தியக் கூற்றானது சட்டத்தரணி ஒருவரின் அல்லது சமாதான நீதிவான் ஒருவரின் முன்னிலையில் விளம்பல் செய்யப்பட வேண்டும்.
  • சட்டத்தரணி ஒருவரின் முன்னிலையில் சத்தியக் கூற்று விளம்பல் செய்யப்படுமாயின் உயர் நீதிமன்றத்தின் பதிவாளரினாலும், சமாதான நீதிவான் ஒருவரின் முன்னிலையில் விளம்பல் செய்யப்படுமாயின் நீதி அமைச்சின் சமாதான நீதவான் கிளையின் அதிகாரம் பெற்ற அலுவலரினாலும் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.
  • விண்ணப்பதாரியின் செல்லுபடியான கடவுச் சீட்டின் உண்மைப் பிரதி சத்தியக் கூற்றுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கைப் பிரஜைகள் அவர்களது திருமணமாகாத அந்தஸ்தினை கொன்சியூலர் சட்டத்தின் கீழ் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரின் முன்னிலையில் இலங்கை தூரகங்களில் சத்தியக்கூற்றினை விளம்பலாம்.
  • சத்தியக்கூற்று மாதிரிப் படிவத்தை இந்தப் பிரிவின் இணையத்தளப் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இந்த அலுவலகத்தின் அறிவித்தல் பலகையிலிருந்து பிரதியாக்கம் செய்து கொள்ளலாம்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close