கௌரவ தமிழ்நாட்டு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களை 2021.11.16ஆந் திகதி ராஜ்பவனில் வைத்து தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஷ்வரன் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
நேர்மறையானதொரு முடிவுக்கு வழிவகுக்கும் வகையில், இலங்கை அகதிகள் மற்றும் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புனர்வாழ்வு முகாம்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சிறைகளுக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கௌரவ ஆளுநரிடம் பிரதி உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தார்.
ஆளுநர் தனது பதவியின் காரணமாக தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் வேந்தராக இருப்பதன் காரணமாக, கோயம்புத்தூர் மற்றும் இலங்கையில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான புலமைப்பரிசில்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் குறித்து பிரதி உயர்ஸ்தானிகர் மேலும் கலந்துரையாடினார்.
இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், அபிவிருத்தி நடவடிக்கைகள், நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான தொடர்பை அதிகரித்தல் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது மேலும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,
சென்னை
2021 நவம்பர் 23