சுவீடன் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

சுவீடன் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் 2021 டிசம்பர் 02ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து இடம்பெற்ற சந்திப்பின் போது, புதுடெல்லியில் உள்ள இலங்கைக்கும் அங்கீகாரம் பெற்ற சுவீடன் தூதுவர் கிளாஸ் மோலின் பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினார்.

நாட்டின் முதலாவது பெண் பிரதமரைத் தெரிவு செய்தமைக்காக அமைச்சர் பீரிஸ் சுவீடனுக்கு இலங்கையின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பல ஆண்டுகளாக சுவீடன் - இலங்கை உறவுகளின் அபிவிருத்தி ஒத்துழைப்பினால் ஏற்பட்ட வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உறவுகளை உள்ளடக்கிய துடிப்பான, பன்முகக் கூட்டாண்மை வரையிலான பரிணாம வளர்ச்சியை இரு தரப்பினரும் பாராட்டினர். இலங்கையில் சுவீடன் நிறுவனங்களின் பிரசன்னம் குறித்து கருத்துத் தெரிவித்த தூதுவர் மொலின், சுவீடனின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சந்தை விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் 'பிஸ்னஸ் சுவீடன்' மூலம் வர்த்தகத்தை மேலும் மேம்படுத்த உதவுவதாகத் தெரிவித்தார்.

கொத்மலை அணையை நிர்மாணிப்பதில் முக்கியமான அபிவிருத்திப் பங்காளியாக சுவீடனின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அமைச்சர் பீரிஸ், நிலையான அபிவிருத்தி, சுத்தமான தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உள்ளிட்ட ஒன்றிணைந்த துறைகளில் சுவீடனுடனான ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான இலங்கையின் தயார்நிலையைத் தெரிவித்தார். நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் முன்னேற்றம் குறித்தும் தூதுவரிடம் விளக்கினார்.

இந்த விஜயத்தின் போது தூதுவர் மோலின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களையுயும் சந்தித்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 டிசம்பர் 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close