சவுதி அரேபியாயின் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்களால் 'இலங்கைத் தயாரிப்பு ஊக்குவிப்பு வாரம்'  முனனெடுப்பு

சவுதி அரேபியாயின் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்களால் ‘இலங்கைத் தயாரிப்பு ஊக்குவிப்பு வாரம்’  முனனெடுப்பு

சவுதி அரேபியாவில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட் சங்கிலி இலங்கைத் தயாரிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தயாரிப்பு விளம்பர வாரத்தைத் தொடங்கியுள்ளது. 2021 செப்டம்பர் 08-14 வரை நடைபெறும் 'லுலுவில் இலங்கை வாரம்', இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 140 வௌ;வேறு  இலங்கைத் தயாரிப்புகளை அணுகும் தனித்துவமான அனுபவத்தை சவுதி அரேபியாவில் உள்ள சவுதி தேசிய மற்றும் வெளிநாடுவாழ் சமூகங்களுக்கு விஷேட ஊக்குவிப்பு விலைகளில் வழங்குகின்றது.

இந்த நிகழ்வின் தொடக்க விழா செப்டம்பர் 08 அன்று ரியாத் அவென்யூ மோலில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் வைத்து ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்களின் அதிகாரிகளுடன் இணைந்து ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. தம்மாம் மற்றும் ஜித்தா நகரங்களிலுள்ள இலங்கை இராஜதந்திரிகள் மற்றும்  சமூக உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஏனைய நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன.

சவூதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா சந்தைகளில் இலங்கைத் தயாரிப்புக்களை ஊக்குவிப்பதில் லுலு ஹைப்பர் மார்க்கெட் சங்கிலி முக்கிய பங்கு வகிக்கின்றது. இலங்கையிலிருந்து பொருட்கள் பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் அமைந்துள்ள பழங்கள், மரக்கறிகள் மற்றும் பொருட்களின் ஆதாரங்கள், பதப்படுத்துதல், சேமித்தல், பொதியிடல் மற்றும் ஏற்றுமதி ஆகிய அதிநவீன வசதிகளையுடைய லுலு - இலங்கை ஆதார அலுவலகத்தினுடாக பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

'லுலுவில் இலங்கை வாரம்' என்பது லுலு சவுதி அரேபியாவால் தொடங்கப்பட்ட மற்றொரு பிரச்சாரமாவதுடன்,  இது 2020 மற்றும் 2021 இன் தொடக்கத்தில் இதுபோன்ற பல பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தது. லுலுவின் வெற்றியின் பின்னணியில் உள்ள கதை அதன் குறைபாடற்ற ஏற்பாடுகள், உயர்தரப் பொருட்கள் மற்றும் இணையற்ற வாடிக்கையாளர் உதவி ஆகியவற்றைப் பொறுத்ததாகும். மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகளுடன், லுலுவின் விரிவாக்கம் அவர்களின் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை,  ஆதரவு மற்றும் விருப்பத்திற்கு சான்றாகும்.

சவூதி அரேபியாவின் இலங்கை உணவுகளின் உண்மையான சுவையை அனுபவித்து வாடிக்கையாளர்கள்  இலங்கையின் உணர்வைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்த விளம்பர வாரத்தின் நோக்கமாகும். இந்த நிகழ்வுக்கு இணையாக, ஹைப்பர் மார்க்கெட் சங்கிலி இலங்கையில் இருந்து அதிகமான பொருட்களை தமது தயாரிப்பு மையங்களில் அறிமுகப்படுத்தும்.

இலங்கைத் தூதரகம்

ரியாத்

2021 செப்டம்பர் 10

Please follow and like us:

Close