சர்வதேச வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பொது நலன் பற்றிய டஷிஹூய் உச்சி மாநாட்டில் இலங்கை உற்பத்திகள் மற்றும் சுற்றுலாக்கூடம் ஆர்வத்தை ஈர்ப்பு

சர்வதேச வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பொது நலன் பற்றிய டஷிஹூய் உச்சி மாநாட்டில் இலங்கை உற்பத்திகள் மற்றும் சுற்றுலாக்கூடம் ஆர்வத்தை ஈர்ப்பு

வர்த்தகம், கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பொது நலன் பற்றிய டஷிஹூய் உச்சி மாநாட்டின் போது இலங்கை உணவுப் பொருட்கள், தேயிலை, கைவினைப்பொருட்கள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை குவாங்சூவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஊக்குவித்தது. வணிக சமூகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இந்த மன்றத்தில் கலந்து கொண்டனர்.

மன்றத்தின் பங்கேற்பாளர்களை கூடத்திற்கு செல்லத் தூண்டும் வகையில், குவாங்சூ ஸ்ரீ ரோட் கனெக்ஷன் டிரேட் கம்பெனி லிமிடெட் உடன் இணைந்து, இந்தியா, மெக்சிகோ, ஈரான், மொராக்கோ மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிக நிறுவனங்களுக்கு மத்தியில் இலங்கையை சிறந்த தலமாக இலங்கையின் துணைத் தூதரகத்தால் காட்சிப்படுத்த முடிந்தது. இலங்கைக் கூடத்தினால் கவரப்பட்ட பல பார்வையாளர்கள் இலங்கையின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்து, தொடர்புத் தகவல்களைப் பரிமாறிக் கொண்ட அதே வேளை, இலங்கைத் தயாரிப்புகளுக்கு உயர்தரமான கொள்வனவாளர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை அளித்தனர். வெளிக்களப் பயணக் கட்டுப்பாடுகள் சீனாவில் தளர்த்தப்படும் போது, ஒரு சுற்றுலாத் தலமாகக் கருதி பார்வையாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கையின் துணைத் தூதரகம்,

குவாங்சூ

2022 ஜனவரி 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close