குவாங்டாங் 21ஆம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுப்பாதை சர்வதேசக் கண்காட்சியானது, சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிப்புக்கான சீன சபை மற்றும் குவாங்டாங் வணிகத் திணைக்களத்தினால் 2021 செப்டம்பர் 24 - 26 வரை குவாங்சோவில் உள்ள கேண்டன் ஃபெயார் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. தூதரகத்தால் வடிவமைக்கப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட 36 சதுர மீட்டர் கொண்ட ஒரு கூடத்துடன் குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் பங்கேற்றது. சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த துடிப்பான வண்ணங்கள் மற்றும் இலங்கையின் முக்கிய சுற்றுலா மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் சில கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையினால், பார்வையாளர்கள் இலங்கையின் கூடத்திற்கு ஈர்க்கப்பட்டனர். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் உதவியுடன், இறப்பர் பொருட்கள், இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள் 'சிலோன் டீ', பிஸ்கட், கித்துல் பானி மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற உற்பத்திகளுடன், சீனாவில் அமைந்துள்ள 08 இலங்கை நிறுவனங்களின் முகவர்களின் பங்கேற்பை தூதரகம் ஏற்பாடு செய்தது. குவாங்சோவில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அலுவலகமும் கண்காட்சியில் பங்கேற்றது.
ஒரு வழி - ஒரு பாதை முன்முயற்சியில் மைய நகரமாக குவாங்சோ உருவாகுகின்றமையினால், குவாங்சோவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து, குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் பிரியங்கிகா தர்மசேன நேன்பாங் டெய்லிக்கு பேட்டி அளித்தார்.
இந்த கண்காட்சி ஒருவரின் கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் ஒரு தளமாகும். வருடாந்த நிகழ்வான இது, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டோங்குவான் நகரத்திலும் பின்னர் குவாங்சோவிலும் தொடங்கியது.
2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் ஒருங்கிணைந்த தூதரகம் பல இலங்கை நிறுவனங்களுடன் தென்னை, தேயிலை, ஆடை, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் பங்கேற்றுள்ளது.
குவாங்சோ மற்றும் பெய்ஜிங்கிலிருந்து 43 துணைத் தூதரகங்கள் மற்றும் தூதரகங்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்ற அதே நேரத்தில், 700,000 க்கும் மேற்பட்ட மக்கள்இணையவழி மற்றும் இணையவழி அல்லாத முறையில் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
இலங்கையின் துணைத் தூதரகம்,
குவாங்சோ
2021 அக்டோபர் 04