கண்ணோட்டம்

பொருளாதார இராஜதந்திரம்

பொருளாதார இராஜதந்திரத்தை மேம்படுத்துவதே இந்தப் பிரிவின் முதன்மையான செயற்பாடாவதுடன், இது பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் வருடாந்த செயற்றிட்டத்தை வகுப்பதன் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. பொருளாதார இராஜதந்திரத்திற்கான நான்கு முன்னுரிமைகளாவன:

 • ஏற்றுமதியை அதிகரித்தல்
 • அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்தல்
 • வெளிநாடுகளில் இலங்கைப் பிரஜைகளுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பின் தரமான மற்றும் அளவு விரிவாக்கம்
 • சுற்றுலாவை ஊக்குவித்தல்

பின்வரும் அணுகுமுறைகள் மூலம் இது மேற்கொள்ளப்படுகின்றது:

 1. வர்த்தகம் மற்றும் முதலீடு சம்பந்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான பொருளாதார குறிகாட்டிகள் மற்றும் பொருளாதார செயற்றிறன் இலக்குகளை அமைத்தல்

ஒவ்வொரு தூதரகம் / பதவிக்கும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த குறிப்பிட்ட இலக்குகளை அமைப்பதில் இந்தப் பிரிவு பொறுப்பானதாகும். பொருளாதார அபிவிருத்தி சபை, முதலீட்டு சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வணிக சபை போன்ற அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய அனைத்து வரிசை முகவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து இந்தத் தொகுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

 1. ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

இலங்கையின் உலகளாவிய தடத்தினை மேம்படுத்துவதற்காகவும், பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பதன் மூலமாக உறுதியான பொருளாதார நன்மைகளைக் கொண்டுவருவதற்காகவும் இலக்காகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதிக திறன் கொண்ட சந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நடவடிக்கைகளைச் செயற்படுத்த, பொருளாதார அபிவிருத்தி சபை, முதலீட்டு சபை, சுற்றுலா சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகிய வரிசை நிறுவனங்களின் குறிக்கோள்களுக்கு ஏற்ப சிறப்பு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடாத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் தூதரகங்கள் / பதவிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

 1. இலங்கை வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர உரையாடல்

இரண்டு வாரத்திற்கான வருடாந்த உரையாடலானது தொழில் வாழ்க்கையின் நடுப்பகுதியில் உள்ள இராஜதந்திரிகளுக்கானதாவதுடன், இது பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் மற்றும் லக்ஷ்மன் கதிர்கமர் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தப்படுகின்றது. பொருளாதார இராஜதந்திரத்திற்கான இலங்கையின் செயலில் உள்ள அணுகுமுறையை மையமாகக் கொண்டு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் பற்றிய விரிவான தெளிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்பாளர்களின் நேர்மறையான அனுபவங்கள் உலகெங்கிலுமுள்ள இலங்கையின் இராஜதந்திர இணைப்புக்களுக்கு உதவுவதோடு, இந்து சமுத்திர வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவுக்கான வளர்ந்து வரும் இடமாக இலங்கையை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 1. வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள்

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை ஈடுபடுத்துவது பொருளாதார இராஜதந்திரப் பிரிவின் திட்டத்தின் கீழான மற்றொரு மையமாவதுடன், இது பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து செயற்படுத்தப்படுகின்றது. பொருளாதாரத்திற்கு வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பங்களிப்புச் செய்வதோடு அவர்களின் பங்களிப்புக்கு அங்கீகாரத்தை அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கத்திற்காக, வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீது முறையே கவனம் செலுத்துதல், அங்கீகரித்தல் மற்றும் மீள்குடியேற்றம் செய்தல் எனும் வகையிலான 3 ஆர் மூலோபாயத்தை பிரிவு முன்மொழிகின்றது. இந்த மூலோபாயத்தின் மூலம், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பொருளாதார, அரசியல், பொது மற்றும் கலாச்சார இராஜதந்திரம் மற்றும் மக்கள் தொடர்பு கொள்ளும் நான்கு அணுகுமுறைகள் மூலம் ஈடுபடுவார்கள்.

மேற்கூறியவற்றைத் தவிர, இந்தப் பிரிவு பின்வரும் முக்கிய பகுதிகளுடன் ஈடுபட்டுள்ளது:

இருதரப்பு

நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பாக பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்காக, பேச்சுவார்த்தை / புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்தல் மற்றும் செயற்படுத்துதல், பொருளாதார ஒத்துழைப்புக்கான இணைந்த ஆணைக்குழுக்களில் பங்கேற்றல், வர்த்தகம் / முதலீட்டுப் பிணக்குகளைத் தீர்த்தல், வர்த்தகம் தொடர்பான வீசா பிரச்சினைகள் மற்றும் பராமரித்தல் தொடர்பான ஒத்துழைப்புப் பயண ஆலோசகர்களைப் பதிவு செய்தல் மற்றும் வரிசை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஏதேனும் பாதகமான ஆலோசனைகளை எதிர்கொள்ளுதல். 

பல்தரப்பு

ஒத்துழைப்பை வலுப்படுத்த சர்வதேச / அரச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் ஈடுபடுதல், பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த மன்றங்களில் இலங்கையின் கொள்கை நிலைகளை வகுத்தல் மற்றும் மேற்கொள்ளப்பட்ட கடமைகளைப் பின்தொடர்தல் ஆகியன இந்தப் பிரிவின் மற்றொரு முக்கிய செயற்பாடாகும். இலங்கையில் சர்வதேச / அரச மற்றும் பிராந்தியக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் இந்தப் பிரிவு பொறுப்பானதாகும்.

சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இணைந்து பல ஐ.நா. நிறுவனங்களுடனான இலங்கையின் உறவுகளின் பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய ஒருங்கிணைப்பை இந்தப் பிரிவு கையாளுகின்றது. யுனெஸ்காப்இ டப்ளிவ்.ஐ.பி.ஓ, யு.என்.சி.டி.ஏ.டி, டப்ளிவ்.டி.ஓ, ஐ.ஓ.எம், டப்ளிவ்.ஈ.எஃப். போன்றவை இதில் அடங்கும்.

பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு குறித்த பின்வரும் முக்கியமான பிராந்திய அமைப்புகளின் மையப் புள்ளியாக பொருளாதார விவகாரப் பிரிவு உள்ளது:

 1. இந்து சமுத்திர விளிம்பு சங்கம்
 2. ஆசியா ஒத்துழைப்பு உரையாடல்
 3. பிம்ஸ்டெக்
 4. கொழும்புத் திட்டம்

தொழில்நுட்ப ஒத்துழைப்பு

இலங்கையில் உள்ள வரிசை நிறுவனங்களுடன் இணைந்து தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு திறன்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கி, திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டினரின் பங்களிப்புடன் பொருளாதார இராஜதந்திரத்துடன் தொடர்புடைய தலைப்புகளில் உரையாடல்கள் / விவாதங்களை வழங்குதல், மற்றும் அத்தகைய உரையாடல்கள் / விவாதங்களின் முடிவுகளை வெளியிடுதல் ஆகியவற்றை இந்தப் பிரிவு மேற்கொள்கின்றது.

காலாந்தர சிறப்புத் திட்டங்கள்

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய சிறப்புத் திட்டங்கள் பின்வருமாறு:

 • எக்ஸ்போ துபாய் 2020

நிலையான அபிவிருத்தி இலக்குகள்

Close