கண்ணோட்டம்

கண்ணோட்டம்


 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சானது, இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையை ஒருங்கிணைத்து நிறைவேற்றி வருகின்றது. வெளிநாட்டலுல்கள் அமைச்சானது கொழும்பில் தலைமைக் காரியாலயத்தையும், வெளிநாடுகளில் இலங்கையின் தூதரகங்களையும் கொண்டுள்ளது.

இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, அப்போதைய இலங்கைப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் வகையில், இவ்வமைச்சு 1948 இல் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சாக முறையாக நிறுவப்பட்டது. 1977 இல் அரசாங்கம் இந்த அமைச்சினை பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என இரண்டு அமைச்சுகளாக வேறாக்கியது. 1978 பெப்ரவரி 04 ஆந் திகதி முதலாவது வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக ஏ.சி.எஸ்.ஹமீட் நியமிக்கப்பட்டார்.

சுதந்திரத்திலிருந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் காலவரிசைப்படியான பட்டியலை கீழ்வரும் இணைப்பின் ஊடாக அணுகலாம்: http://www.mfa.gov.lk/former-foreign-ministers/  

பணிக்கூற்று

“அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அமைவாக சர்வதேச  ரீதியாக இலங்கையின் தேசிய நலன்களை மேம்படுத்தல், செயல்முறைப்படுத்தல், பாதுகாப்பளிப்பதுடன், இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்வதேச அபிவிருத்திகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதலும்.”

Print Friendly, PDF & Email

Close