எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் தாக்கம் குறித்து வெளிநாட்டு அமைச்சு கலந்துரையாடல்

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் தாக்கம் குறித்து வெளிநாட்டு அமைச்சு கலந்துரையாடல்

இலங்கையின் கடல் எல்லைக்குள் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் விஷேட கலந்துரையாடலொன்று வெளிநாட்டு அமைச்சில் நேற்று (01) இடம்பெற்றது. மீன்வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் கௌரவ நாலக்க கொடஹேவா மற்றும் அந்தந்த அமைச்சுக்களின் உயர் மட்ட அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Please follow and like us:

Close