ஊடக அறிக்கை

ஊடக அறிக்கை

அமேசன் இணையத்தளத்தில் இணையவழியில் கொள்வனவு செய்யும் வகையில் விளம்பரம் செய்யப்படும் 'இலங்கைக் கொடி வடிவ வழுக்காத கால் மிதித் துடைப்பான்தொடர்பில் சமூக ஊடகத் தளங்களில் சமீபத்திய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 சீனாவில் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளதுடன்இலங்கையின் தேசியக் கொடியை ஒரு கால் மிதித் துடைப்பானாக விளம்பரம் செய்துள்ளமை தொடர்பில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார். அமேசன் என்ற விளம்பரத் தளத்துடன் இந்த விடயம் தொடர்பில் பின்தொடருமாறு வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 

2021 மார்ச் 12

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close