ஈ-வணிகம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மூலம் வணிகத்தை மேம்படுத்துவது குறித்த பெண் தொழில்முனைவோருக்கான தேசியப் பயிற்சியை இலங்கையின் சுஹூருபாயாவில் யுனெஸ்கெப் வெற்றிகரமாக நிறைவு

 ஈ-வணிகம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மூலம் வணிகத்தை மேம்படுத்துவது குறித்த பெண் தொழில்முனைவோருக்கான தேசியப் பயிற்சியை இலங்கையின் சுஹூருபாயாவில் யுனெஸ்கெப் வெற்றிகரமாக நிறைவு

இலங்கைத் தூதரகம் மற்றும் தாய்லாந்தில் உள்ள யுனெஸ்கெப்பிற்கான நிரந்தரத் தூதரகத்தால் தொடங்கப்பட்டு, புதுதில்லியில் உள்ள ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய அலுவலகம் மற்றும் இலங்கையில் உள்ள ஏழு முக்கிய அரச நிறுவனங்களுடன் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டஈ-வணிகம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மூலம் வணிகத்தை மேம்படுத்துவது குறித்த பெண் தொழில்முனைவோருக்கான தேசியப் பயிற்சி, இலங்கையில் பெண் தொழில்முனைவோருக்கு வசதிகள் மற்றும் ஆதரவு மற்றும் இலங்கையில் பெண்களின் ஈ-வணிகம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சியை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், 01-03 நவம்பர் 2022 வரை இலங்கையின் சுஹூருபாயாவில் நடைபெற்றது.

யுனெஸ்கெப்பின் 'தெற்காசியாவில் பெண்கள் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஈ-வணிகத் திறனை உருவாக்குதல்' திட்டத்தின் கீழான 03 நாள் வேலைத்திட்டத்தின் போது, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய கைவினைப் பேரவை, மசாலாப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபை, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, கைத்தொழில் அபிவிருத்தி சபை, இலங்கை கைவினைப் பொருட்கள் சபை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விவசாய-தொழில்நுட்ப மற்றும் கிராமிய விஞ்ஞான நிறுவனம் ஆகியவற்றால் பெயரிடப்பட்ட 85 பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கப்பட்டது. யுனெஸ்கெப் - தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவின் சுவீர சக்சேனா மற்றும் தீபாலி கோடட்கே ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டர்.

தேசிய பயிற்சியின் ஆரம்ப உரையை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் இலங்கையின் கைத்தொழில் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன நிகழ்த்தியதுடன், யுனெஸ்கெப் - தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவின் பணிப்பாளரும் தலைவருமான மிகிகோ டனகா மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி ஆகியோரால் வரவேற்புரை வழங்கப்பட்டது.

இலங்கை கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.எம். திலக்க ஜயசுந்தர, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் இணைப் பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சசீந்திர சமரத்ன மற்றும் எல்.ஓ.எல்.சி. ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைவி ரோஹினி நாணயக்கார ஆகியோர் 'இலங்கையின் பெண் தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான கொள்கை ஆலோசனை' என்ற குழுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பயிற்சியின் இறுதியில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் சுரேஷ் டி மெல் சிறப்புரையாற்றியதுடன், இலங்கை தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எரஹபொல மற்றும் வாசனைத் திரவியங்கள் மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையின் தலைவி குமுதினி குணசேகர ஆகியோர் நிறைவுரையாற்றினர்.

இந்த விஜயத்தின் போது, யுனெஸ்கெப் - தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவின் பணிப்பாளரும் தலைவருமான மிக்கிகோ டனகா இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் சமிந்திரி சபரமாது, திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் சிந்தக ஹெட்டியாராச்சி ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொண்டார்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 நவம்பர் 04

Please follow and like us:

Close