ஈரான் இஸ்லாமியக் குடியரசு இலங்கைக்கு அத்தியாவசியமான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடை

ஈரான் இஸ்லாமியக் குடியரசு இலங்கைக்கு அத்தியாவசியமான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடை

2022 நவம்பர் 03ஆந் திகதி தெஹ்ரானில் உள்ள செஞ்சிலுவை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கம், ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. இந்த மருந்துகளின் மொத்த பெறுமதி ரூபா. 108,123,522க்கு மேற்பட்டதாவதுடன், இது 294,743 அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும்.

119 அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் அடங்கிய இந்த நன்கொடை ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜி.எம்.வி. விஸ்வநாத் அபோன்சுவிடம் ஈரான் அரசாங்கத்தால் ஈரானின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் கையளிக்கப்பட்டது. சரக்குகளை ஏற்றுக்கொண்ட இலங்கைத் தூதுவர், சரியான நேரத்திலான தாராளமான பங்களிப்பிற்காக ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், கடினமான காலங்களில் இலங்கைக்கான ஈரானின் தொடர்ச்சியான ஆதரவை சுட்டிக்காட்டிய இலங்கைத் தூதுவர், நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

2022 ஜூன் மாதத்தில் இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக சுகாதார பிரதி அமைச்சர் கலாநிதி மொஹமட் ஹொசைன் நிக்னம், மேற்கு ஆசியாவிற்கான வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் டாக்டர் செயிட் ரசூல் மௌசவி, ரானின் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கலாநிதி பிர் ஹொசைன் கோலிவாண்ட் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தூதுவர் விஸ்வநாத் அபோன்சு விடுத்த கோரிக்கையின் விளைவாக இந்த மருத்துவப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஈரானில் உள்ள பங்கே டீ பிரைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் அலிரேசா பர்டேயின் ஆதரவுடன் ஈரானில் இருந்து இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை அனுப்புவதற்கு உடனடி ஏற்பாட்டைச் செய்தது. இந்தப் பொருட்கள் கொண்ட கப்பல் 2022 நவம்பர் நடுப்பகுதியில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும்.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2022 நவம்பர் 04

...............................................

මාධ්‍ය නිවේදනය

ඉස්ලාමීය ඉරාන ජනරජය ශ්‍රී ලංකාවට අත්‍යවශ්‍ය ඖෂධ හා වෛද්‍ය සැපයුම් තොගයක් පරිත්‍යාග කරයි

ඉස්ලාමීය ඉරාන ජනරජය, ඉරානයේ රෙඩ් ක්‍රෙසන්ට් සංවිධානය සමඟ එක්ව, 2022 නොවැම්බර් 03 වැනි දින ටෙහෙරානයේ පිහිටි රෙඩ් ක්‍රෙසන්ට් සංවිධානයේ කාර්යාලයේ පැවති උත්සවයක් අතරතුර, ශ්‍රී ලංකාවට අත්‍යවශ්‍ය ඖෂධ තොගයක් සහ අනෙකුත් වෛද්‍ය සැපයුම් තොගයක් පරිත්‍යාග කළේ ය. මෙම ඖෂධ සහ වෛද්‍ය සැපයුම් තොගයේ සමස්ත වටිනාකම ශ්‍රී ලංකා රුපියල් 108,123,522 කට අධික වන අතර, එය ඇමරිකානු එක්සත් ජනපද ඩොලර් 294,743 කට සමාන වේ.

අත්‍යවශ්‍ය ඖෂධ වර්ග හා වෛද්‍ය සැපයුම් 119 කින් සමන්විත මෙම පරිත්‍යාගය, ඉරාන විදේශ කටයුතු අමාත්‍යංශයේ සහ ඉරානයේ රෙඩ් ක්‍රෙසන්ට් සංවිධානයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් ඉදිරිපිට ඉරාන රජය විසින් ඉරානයේ ශ්‍රී ලංකා තානාපති ජී.එම්.වී. විශ්වනාත් අපොන්සු මැතිතුමා වෙත භාර දෙන ලදී. මෙම පරිත්‍යාගය භාර ගත් ශ්‍රී ලංකා තානාපතිවරයා, ඉස්ලාමීය ඉරාන ජනරජය මෙලෙස කාලෝචිත අයුරින් විදහා දැක්වූ ත්‍යාගශීලී දායකත්වය වෙනුවෙන් ශ්‍රී ලංකා රජයේ සහ ශ්‍රී ලංකා ජනතාවගේ බලවත් කෘතඥතාව පළ කළේ ය. තවද, දුෂ්කර කාලවලදී ඉරානය ශ්‍රී ලංකාවට ලබාදෙන අඛණ්ඩ සහයෝගය පිළිබඳව සඳහන් කළ ශ්‍රී ලංකා තානාපතිවරයා, යහපත් සබඳතා සහ සහයෝගීතාව අඛණ්ඩව පවත්වා ගැනීමේ වැදගත්කම පිළිබඳව ද අවධාරණය කළේ ය.

ශ්‍රී ලංකාවේ ප්‍රගතිය පිළිබඳව දැනුම්වත් කිරීම සඳහා තානාපති විශ්වනාත් අපොන්සු මැතිතුමා 2022 ජුනි මස නියෝජ්‍ය සෞඛ්‍ය අමාත්‍ය වෛද්‍ය මොහොමඩ් හොසේන් නික්නාම් මැතිතුමා, බටහිර ආසියානු කටයුතු පිළිබඳ සහකාර විදේශ කටයුතු අමාත්‍ය ආචාර්ය සෙයිද් රසූල් මුසාවි මැතිතුමා, ඉරානයේ රෙඩ් ක්‍රෙසන්ට් සංවිධානයේ ප්‍රධානී වෛද්‍ය පිර් හොසෙයින් කොලිවාන්ඩ් මහතා සහ ඉස්ලාමීය ඉරාන ජනරජයේ විදේශ කටයුතු අමාත්‍යංශයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් හමුවූ අවස්ථාවේ දී යොමු කළ ඉල්ලීමක ප්‍රතිඵලයක් ලෙස මෙම වෛද්‍ය සැපයුම් සහ ඖෂධ තොගය පරිත්‍යාග කරන ලදී.

මෙම පරිත්‍යාගය ඉරානයේ සිට ශ්‍රී ලංකාවට එවීම සඳහා ටෙහෙරානයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය Pankeh Tea පුද්. සමාගමේ කළමනාකාර අධ්‍යක්ෂ අලිරේසා බාර්දෙයි මහතාගේ සහය ද ඇතිව කඩිනම් විධිවිධාන සැලසී ය. තවද, එය රැගත් නෞකාව 2022 නොවැම්බර් මස මැද භාගය වන විට කොළඹ වරායට පැමිණීමට නියමිත ය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

ටෙහෙරානය

2022 නොවැම්බර් 04 වැනි දින

.................................................

ஊடக வெளியீடு

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close