இஸ்தான்புல்லில் விபத்தில் சிக்கிய இலங்கைத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்

இஸ்தான்புல்லில் விபத்தில் சிக்கிய இலங்கைத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்

துருக்கியின் இஸ்தான்புல்லில் இலங்கைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 2023 ஆகஸ்ட் 09ஆந் திகதி விபத்துக்குள்ளானது. அந்த இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பணியிடத்திலிருந்து தொழிலாளர்கள் தமது தங்குமிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

விபத்தில் சிக்கிய இருபத்தி ஒன்பது இலங்கையர்களில் ஒன்பது பேர் தற்போது இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மிகுதி இருபது பேர் அன்றே வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்தனர்.

காயமடைந்தவர்களின் நிலை குறித்து இலங்கையர்களை பணியமர்த்திய நிறுவனத்துடனும், மருத்துவமனை அதிகாரிகளுடனும் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி, நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து தேவையான உதவிகளை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் மேற்கொண்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பில் துருக்கிய வெளிவிவகார அமைச்சுடன் தூதரகம் தொடர்புகளைப் பேணி வருகின்றது.

நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் நல்வாழ்வையும் மீட்சியையும் உறுதிசெய்யும் வகையில் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஆகஸ்ட் 12

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close