இலங்கை மண்ணின் கலவை குறித்து ஆய்வொன்றை முன்னெடுப்பதற்காகவும், விவசாயிகளுக்கு மண் அட்டையை வழங்குவதற்காகவும் உணவு மற்றும் விவசாய அமைப்பிலிருந்து உதவி கோரப்படுகின்றது.

இலங்கை மண்ணின் கலவை குறித்து ஆய்வொன்றை முன்னெடுப்பதற்காகவும், விவசாயிகளுக்கு மண் அட்டையை வழங்குவதற்காகவும் உணவு மற்றும் விவசாய அமைப்பிலிருந்து உதவி கோரப்படுகின்றது.

இலங்கையில் இயற்கை உரங்களின் பயன்பாட்டை நெறிப்படுத்துவதற்காக உதவுவதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்ணின் வளம் குறித்து ஆய்வொன்றை முன்னெடுப்பதற்காகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்ணின் கலவை குறித்து ஒரு குறிகாட்டியை வகுப்பதற்காகவும் உணவு மற்றும் விவசாய அமைப்பு இலங்கையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கைக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி திரு. விம்லேந்திர ஷரன் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களை சந்தித்த நேரத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆழமாகக் கலந்துரையாடியதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு ஜூன் 29ஆந் திகதி இடம்பெற்றது.

இலங்கை விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நிலங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை மதிப்பிடுவதற்காக உதவியமைக்காக தனது மகிழ்ச்சியை உணவு மற்றும் விவசாய அமைப்பிற்குத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர், இந்த சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து அதிகமாக கவனம் செலுத்தினார். அத்தகைய புரிதலானது உரப் பயன்பாட்டை முறையாக நிர்வகிப்பதற்கு அரசாங்கத்தை வழிநடத்தும் என்பதுடன், வீணாகாமல் அதிகமான அறுவடை மற்றும் இலாபகரமான விவசாயத்தை மேற்கொள்வதற்கு விவசாய சமூகத்தை வழிநடத்தும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் விவசாய நிலங்களில் மண் சார்ந்த முறையான ஆய்வினை முன்னெடுப்பதானது நீண்ட காலமாகத் தாமதமாகி வருவதனால், இதுபோன்ற ஆய்வின் போது விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டையை வழங்குவது ஒட்டுமொத்தமாக பயனளிக்கும் என கௌரவ அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

Please follow and like us:

Close