இலங்கையின் வடிவமைப்பு நுட்பங்கள் ஜோர்தானில் வெளியீடு

 இலங்கையின் வடிவமைப்பு நுட்பங்கள் ஜோர்தானில் வெளியீடு

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையில் உள்ள டிசைன் அகடமியுடன் இணைந்து, அம்மானில் உள்ள ஆடை வடிவமைப்பு பயிற்சி சேவை மையத்தில் ஜோர்தானிய மாணவர்களுக்கு டிசைன் அகடமியில் கற்பிக்கப்படும் புதுமையான வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நுட்பங்களை காட்சிப்படுத்தி, வழங்குவதற்கான ஒரு மெய்நிகர் பட்டறையை ஏற்பாடு செய்தது. ஜோர்தான் எண்டர்பிரைஸ் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் கார்மென்ட் டிசைன் பயிற்சி சேவைகள் மையம், அமைச்சர்கள் சபையால் 2003 இல் நிறுவப்பட்டது.

தூதுவர் ஷானிகா திஸாநாயக்க தனது ஆரம்ப உரையில், ஜோர்தானிய வடிவமைப்பாளர்களுக்கு இலங்கையின் வடிவமைப்பாளர்கள் கொண்டுள்ள வடிவமைப்பு அனுபவத்தின் வளத்தைப் பெறுவதற்கு தூதரகத்தினால் இந்த செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.  பொது முகாமையாளர் இஷார விஜேமான்னே தலைமையிலான இந்த செயலமர்வுக்கான குழு,  ஹவுஸ் ஒஃப் லோனாலியின் லோனாலி ரொட்ரிகோ, நியூயோர்க்கில் உள்ள குர் சேகரிப்பின் ஸ்தாபகரான கசுனி ரத்னசூரிய மற்றும் அமேஷ் விஜேசேகர ஆகிய உள்நாட்டிலும் உலக அளவிலும் தமது படைப்புகளை சந்தைப்படுத்துவதில் வெற்றி பெற்ற மூவரின் பணியை சிறப்பித்தது.

பிளப்யூலசின் ஸ்தாபகரான ரஞ்சுலா ஹேரத் ஜோர்தானிய மாணவர்களுடன் நுண்ணறிவு சார்ந்ததொரு ஊடாடும் கேள்வி பதில் அமர்வை நடத்தினார். இந்தத் துறையில் செழிப்பான மற்றும் தாக்கம் மிக்க தொழிலுக்காக ஃபெஷன் துறையில் அவர்களின் ஆக்கபூர்வமான மற்றும் மூலோபாய சிந்தனையை வளர்ப்பதற்கு வழிகாட்டினார்.

இலங்கைக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்காக தூதரகத்தால் திட்டமிடப்பட்ட கலாசார நடவடிக்கைகளின் தொடர் பாகமாக செப்டெம்பர் 13 ஆம் திகதி நடைபெற்ற செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

ஜோர்டான்

2022 செப்டம்பர் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close