இலங்கையின் கௌரவ தூதுவர்கள் மற்றும் அங்காராவில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக  மருத்துவ உபகரணங்களை நன்கொடை

இலங்கையின் கௌரவ தூதுவர்கள் மற்றும் அங்காராவில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக  மருத்துவ உபகரணங்களை நன்கொடை

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படத்தக்க  மருத்துவ உபகரணங்களை, தூதரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் எர்சுரம், அலன்யா, பர்சா மற்றும் இஸ்தான்புல் ஆகியவற்றின் கௌரவ தூதுவர்கள் நன்கொடையாக வழங்கினர்.

இலங்கையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மகத்தான முயற்சிக்கு ஆதரவாக, இந்த நன்கொடையில் விரல் நுனி ஒக்சிமீட்டர்கள்,  அகச்சிவப்பு நெற்றி வெப்பமானிகள், நேர்மறை காற்றுப்பாதை அழுத்தி, ஒட்சிசன் செறிவூட்டிகள் மற்றும் கம்ப்ரசர் நெபுலைசர் ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன.

துருக்கிய எயார்லைன்ஸின் சரக்குப்பிரிவு மற்றும் ஆஸ்யா நக்லியாட் ஆகியவற்றின் உதவியுடன் மருத்துவ நன்கொடைகளை  அனுப்பி வைப்பதற்கு தூதரகம் உதவியது.

கௌரவ தூதுவர்கள் மற்றும் இலங்கையர்களின் உதவிகள் குறித்து கருத்துத் தெரிவித்த தூதுவர் எம்.ஆர். ஹஸன், அவர்களது முயற்சி  மற்றும் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனுமான அவர்களது ஒற்றுமையைப் பாராட்டினார்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 ஜனவரி 03

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close