இலங்கைத் தயாரிப்புக்களை சினோபெக் 27,000 விற்பனை நிலையங்களில் இறக்குமதி  செய்து சந்தைப்படுத்தவுள்ளது

இலங்கைத் தயாரிப்புக்களை சினோபெக் 27,000 விற்பனை நிலையங்களில் இறக்குமதி  செய்து சந்தைப்படுத்தவுள்ளது

சீனாவில் 27,000 க்கும் மேற்பட்ட சேவை நிலையங்களைக் கொண்ட மாபெரும் எண்ணெய் நிறுவனமான சினோபெக், ஷாங்காய் 5வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் போது பெய்ஜிங் ஸ்ரீ  வீதி இணைப்பு விற்பனை நிறுவனத்துடன் இலங்கை உணவு மற்றும் குளிர்பானத் தயாரிப்புக்களை தமது கடைகளில் இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி 0.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.

ஷாங்காயில் 5வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி 2022 நவம்பர் 5 முதல் 10 வரை நடைபெற்றது. உணவு மற்றும் பானங்கள் மற்றும் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளை இலங்கைக் கூடம் கொண்டிருந்தது. வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீனா - இலங்கை சங்கம் தானாக முன்வந்து பொறுப்பேற்றதுடன், இலங்கைத் தூதரகம் மற்றும்  சங்கத்தின் உறுப்பு நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றின் ஆதரவுடன் இலங்கைக் கூடத்தை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில் இலங்கை பங்குபற்றுவது இது 5வது தடவையாகும். 5வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் பங்கு பெற்ற நிறுவனங்கள் 500,000 ரென்மின்பி பெறுமதியிலானதும், மற்றும் 160க்கும் மேற்பட்ட வர்த்தக விசாரணைகளையும் பெற்று விற்பனையில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்திருப்பதன் காரணமாக இதில் பங்கேற்பது இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.

சினோபெக் மற்றும் பெய்ஜிங் ஸ்ரீ வீதிக்கு இடையிலான ஒப்பந்தம், இலங்கை எஃப் மற்றும் பி  தயாரிப்புக்களை லாபகரமான சீன சந்தையில் மேலும் விரிவுபடுத்த உதவும் என பெய்ஜிங் ஸ்ரீ வீதி இணைப்பு விற்பனை நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் சிரஞ்சய உடுமுல்லகே தெரிவித்ததுடன், சினோபெக்கின் சர்வதேச விற்பனைப் பிரதி முகாமையாளர் வாங் கியான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

5வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியானது சீனாவில் நடைபெறும் மிகப்பெரிய வர்த்தக  கண்காட்சியாவதுடன், இதன் மூலமாக உலக நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையான சீன சந்தையை அணுக முடியும்.

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக இந்த  ஆண்டு விளங்குவதால், சினோபெக் உடனான இந்த இணைப்பு உண்மையில் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு இராஜதந்திர உறவுகளை நிறுவிய 65வது ஆண்டு மற்றும் ரப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.

இலங்கைத் தூதரகம்

பெய்ஜிங்

2022 டிசம்பர் 02

Please follow and like us:

Close