இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இராஜதந்திர ஆலோசனைகளின் 11வது அமர்வில் இலங்கையும் சீனாவும் கலந்துரையாடல்

இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இராஜதந்திர ஆலோசனைகளின் 11வது அமர்வில் இலங்கையும் சீனாவும் கலந்துரையாடல்

 

2020 நவம்பர் 23ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக இடம்பெற்ற இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசனைகளின் 11வது அமர்வுக்கு சீன வெளிவிவகார அமைச்சின் துணை அமைச்சர் லூவோ ஜாஹுய் அவர்களுடன் இணைந்து வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தலைமை தாங்கினார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் இடம்பெற்று வரும் பன்முகக் கூட்டாண்மை குறித்து திருப்தி வெளியிட்ட அதே வேளையில், உயர் மட்டப் பரிமாற்றங்களை வலுப்படுத்துதல், கோவிட்-19 க்கு எதிராகப் போராடுதல், பொருளாதார மீட்பு முயற்சிகள், மக்களுக்கிடையிலான பரிமாற்றம், சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளிலான ஒத்துழைப்பு குறித்தும் இரு தரப்பினரும் விரிவான கலந்துரையாடல்களை நடாத்தினர். தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும், வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்பான கவனத்தை செலுத்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான மூலோபாயக் கூட்டுறவுப் பங்காண்மையை மேலும் உயர்த்துவதற்கான பரஸ்பரம் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளையும் இரு தரப்பினரும் அடையாளம் கண்டனர்.

பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் மற்றும் இரு வெளிநாட்டு அமைச்சுக்களினதும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மெய்நிகர் சந்திப்பில் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு

2020 நவம்பர் 23

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close