இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஓமானின் புரைமியில் உள்ள சாரா ஒயாசிஸில் இலங்கையின் பழ மரக்கன்றுகளை தூதுவர் அமீர் அஜ்வத் நட்டு வைப்பு

இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஓமானின் புரைமியில் உள்ள சாரா ஒயாசிஸில் இலங்கையின் பழ மரக்கன்றுகளை தூதுவர் அமீர் அஜ்வத் நட்டு வைப்பு

ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் 2021 நவம்பர் 21 முதல் 22 வரை ஓமான் சுல்தானேற்றின் வடமேற்குப் பகுதியான அல் புரைமி ஆளுநரகத்துக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அவர் அல் புரைமியின் ஆளுநர் சயீத் கலாநிதி. ஹமத் பின் அஹமட் பின் சௌத் அல் புசைதியை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் வளர்க்கப்படும் கெனிஸ்டல் பழத்தின் (ஈரப் பலா) மரக்கன்றுகளை அல் புரைமியின் வலி ஷேக் கலாநிதி. ஹிலால் பின் அலி அல் ஹப்சியுடன் இணைந்து பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்பான சாரா பாலைவனச் சோலையில் (ஃபலாஜ்) தூதுவர் அமீர் அஜ்வத் நடடு வைத்தடார். அல் புரைமி பகுதியில் உள்ள 3,000 ஆண்டுகள் பழமையான ஃபலாஜ், அல் சர்ரானியில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருகின்றது. இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஓமானில் உள்ள இந்த வரலாற்றுச் சோலையில் இலங்கையின் பழ மரம் நட்டு வைக்கப்பட்டது. இந்த விஷேட நிகழ்வின் போது ஃபலாஜ் அல் சரானியின் முகாமையாளரான பொறியாளர் தாலிப் அஹமட் அல் ஜாப்ரியும் கலந்து கொண்டார்.

ஓமான் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் அல் புரைமி கிளை உறுப்பினர்களுக்கு மத்தியில்  உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், இரு நாடுகளினதும் தேசிய சபைகளுக்கிடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி இலங்கை மற்றும் புரைமி பிராந்தியத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். புரைமியை தளமாகக் கொண்ட முன்னணி தொழிலாளர் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் / பிரதிநிதிகளையும் சந்தித்த தூதுவர், தொழிலாளர் ஆட்சேர்ப்பில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் இலங்கை வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையை நெறிப்படுத்துதல் குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் மாலையில், இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அல் புரைமியில் உள்ள கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 'இலங்கைத் தூதுவர் கோப்பை' க்காக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தூதுவர் பங்கேற்றார். வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு கோப்பையை வழங்கினார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் புரைமியின் ரோயல் ஓமானி பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகளும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றனர்.

அல் புரைமி பிராந்தியத்திற்கான இலங்கைத் தூதுவரின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை கௌரவிக்கும் வகையில் அல் புரைமியில் உள்ள இலங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரவு விருந்தொன்றை வழங்கியதுடன், தூதுவர் அமீர் அஜ்வத்துக்கு நினைவுச் சின்னத்தையும் வழங்கி வைத்தனர்.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2021 நவம்பர் 29

Please follow and like us:

Close