இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளுக்கான '2021 ஆம் ஆண்டின் சிறந்த நபராக' ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்தை உலக வளர்ச்சி மன்ற இதழ் தேர்வு

இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளுக்கான ‘2021 ஆம் ஆண்டின் சிறந்த நபராக’ ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்தை உலக வளர்ச்சி மன்ற இதழ் தேர்வு

 பிரபல மாதாந்த வணிக மற்றும் செய்தி இதழான உலக வளர்ச்சி மன்ற இதழ், ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்தை இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளுக்காக '2021 ஆம் ஆண்டின் சிறந்த நபர்களில்' ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

உலக வளர்ச்சி மன்ற இதழ் 2021ஆம் ஆண்டில் உலகின் நேர்மறையான வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பாத்திரங்களை வகித்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதுடன், 'இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளில் மைற்கற்களை உருவாக்குதல்' என்பதற்காக 2021ஆம் ஆண்டின் உலக வளர்ச்சி மன்ற நபராக தூதுவர் அமீர் அஜ்வத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த இதழ் தனது ஜனவரி 2022 இதழில் தூதுவர் அமீர் அஜ்வத்துடனான ஒரு பிரத்யேக நேர்காணலை வெளியிட்டுள்ளது, அதை பின்வரும் இணைப்பில் அணுகலாம்:

https://worldgrowthforums.com/world-growth-forums-magazines/wgf-mag-jan-2022/

ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையான உலக வளர்ச்சி மன்ற இதழ், உலகத் தலைவர்களை நேர்மறையான உலக வளர்ச்சிக்கான சிறந்த ஒரு தளத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக வளர்ச்சி மன்றம், அனைத்து பிரிவுகள், சமூகங்கள், பொருளாதாரங்கள், பிராந்தியங்கள், நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையே எல்லா நேரங்களிலும் அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்யும் நோக்குடன் பல நாடுகளில் அதன் இருப்பு மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்கு வகிக்கின்றது. உலக வளர்ச்சி மன்றத்தில் 85க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 25,000க்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. உலக வளர்ச்சி மன்றங்களின் வர்த்தக முத்திரையின் கீழ் லைகோர்ன் இன்டர்நெஷனல் இதழ் வெளியிடப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2022 பிப்ரவரி 14

Please follow and like us:

Close