இராஜதந்திரக் கழக சிரியாவின் சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு

 இராஜதந்திரக் கழக சிரியாவின் சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு

பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, டமஸ்கஸில் இடம்பெற்ற சர்வதேச சந்தையில் பங்குபற்றிய லெபனான் மற்றும் சிரியாவுக்கான இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கைத் தேயிலை சபை ஆகியன, இலங்கைத் தேயிலை மற்றும் கைவினைப்பொருட்களை 2021 அக்டோபர் 09ஆந் திகதி சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள டமா  ரோஸ் ஹோட்டலில் காட்சிப்படுத்தியது. சர்வதேச சந்தையில் 19 நாடுகள் பங்கேற்றிருந்ததுடன், இலங்கைக் கூடத்துக்கு முக்கியத்துவம் நிறைந்திருருந்தது.

சிரியாவின் கல்வி அமைச்சர் கலாநிதி. தரேம் தப்பா மற்றும் இராஜதந்திரக் கழகத்தின் தலைவர் திருமதி. பாரி  பிலிப் கில்டர் ஆகியோரால் பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றிவைக்கப்பட்டு, தூதரகத்தின் கூடம் திறந்து வைக்கப்பட்டது.

வருகை தந்த அனைவருக்கும் சுவைபார்ப்பதற்காக இலங்கைத் தேயிலையும், மற்றும் இலங்கைத் தேயிலைப்  பைகளின் மாதிரிகளும் வழங்கப்பட்டன. ஷான் டீஸ் (பிரைவெட்) லிமிடெட், மாப்ரோக் டீஸ் (பிரைவெட்) லிமிடெட், விண்டேஜ் டீஸ் (பிரைவெட்) லிமிடெட், சிலோன் டென்னி டீ (பிரைவெட்) லிமிடெட் மற்றும் சிலோன் ஃப்ரெஷ் டீஸ் (பிரைவெட்) லிமிடெட் ஆகியன இதில் பங்கேற்ற நிறுவனங்களாகும்.

 இலங்கைத் தூதரகம்,

பெய்ரூட்

2021 அக்டோபர் 12

Please follow and like us:

Close