அவர்களுடன் 2021 ஜனவரி 06ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை

அவர்களுடன் 2021 ஜனவரி 06ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை

ஆயூபோவன்
இந்திய வெளியுறவு அமைச்சர் கௌரவ கலாநிதி. ஜெய்சங்கர் அவர்களே,
பிராந்திய வெளிநாட்டு உறவுகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களே,
இந்திய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு திரு. கோபால் பாக்லே அவர்களே,
இந்திய மற்றும் இலங்கைப் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே

இந்த ஆண்டிற்கான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டமைக்காக வெளிவிவகார அமைச்சர் கௌரவ கலாநிதி. ஜெய்சங்கர் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். கலாநிதி. ஜெய்சங்கர் அவர்களே, நன்றி.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கௌரவ கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் அவர்களுடன் நான் நல்லுறவு மற்றும் நட்பு ரீதியான இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டேன்.

2600 ஆண்டுகளுக்கு முன்னர் கௌத்தம புத்தர் அவர்களின் வருகையால் இலங்கை மூன்று முறை ஆசீர்வதிக்கப்பட்டது.

பாரதத்தின் மஹா அசோக்க பேரரசரின் மகனும் மகளுமான மஹா மஹிந்த தேரர் மற்றும் சங்கமித்தா தேரி ஆகியோரின் வருகையுடன், 2300 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் புத்தசாசனம் நிறுவப்பட்டது.

மகத்தான கலாச்சாரப் பிணைப்புக்கள் அனைத்து நேரங்களிலும் எமது நட்பை பலப்படுத்துகின்றன. மேலும், இன்று எமது இரு நாடுகளும் ஆசியாவின் முன்னணி நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளாகும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய எமது பிரஜைகள் அனைவரினதும் நல்வாழ்விற்கும், வாய்ப்புக்களுக்கும் தாம் உறுதிபூண்டுள்ளதாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியாக தெரிவித்துள்ளார்.

எமது பேச்சுவார்த்தைகளின் போது, பொருளாதாரம், நிதி, வர்த்தகம், வணிகம், காவல், பாதுகாப்பு, மீன்வளம், கலாச்சாரம் மற்றும் குறிப்பாக கடந்த ஆண்டு முதல் நிலைத்துள்ள கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடையாளம் காணப்பட்ட பல துறைகளில் நாம் கவனம் செலுத்தினோம்.

கோவிட் தொற்றுநோயின் மோசமான தாக்கங்களைத் தணிப்பதற்காக கடந்த பல மாதங்களாக இந்தியா அளித்த மகத்தான ஆதரவுகளுக்காக, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில், பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மற்றும் வெளிவிவகார அமைச்சராகிய தங்களுக்கும் எமது ஆழமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முன்னோடியில்லாத இந்த நெருக்கடியின் முக்கியமான காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் 'அண்டைநாட்டுக்கு முன்னுரிமையளித்தல்' என்ற கொள்கையானது, எமது சுகாதாரத் துறையிலும், பொருளாதாரத்திலும் மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இலங்கை யாத்திரிகர்கள், மாணவர்கள் மற்றும் மருத்துவத் தேவையுடையவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான உதவிகளையும் வழங்கியது.

பல்வேறு துறைகளிலான மேம்பட்ட முதலீடுகளின் மூலம் எமது பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவின் பங்காண்மையை எனது தூதுக்குழு எதிர்பார்த்தது. நிச்சயமாக நெருங்கிய அண்டை நாடுகளாகவும், இந்து சமுத்திரத்தின் நேரடி அரசுகளாகவும் இருப்பதால், காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், கடல் மற்றும் மீன்வளத் துறைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினோம்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இந்தப் பகுதிகளில் ஒருங்கிணைந்த மற்றும் நெருக்கமான உரையாடலின் தற்போதைய வேகத்தைத் தொடருவதற்கும், பிம்ஸ்டெக், ஐயோரா மற்றும் சார்க் ஆகியவற்றிலான எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

அறிவும் தொழில்நுட்பமும் உலகளாவிய இருப்புக்கான சிறந்த காரணிகளாக மாறியுள்ள ஒரு நேரத்தில், எமது நாடுகளின் இளைஞர்கள் நிச்சயமாக ஒரு நம்பிக்கைக்குரிய தினத்திற்கு எம்மை அழைத்துச் செல்வார்கள்.

எமது பொருளாதாரங்களை இயக்குவதற்கு சூரியன் மற்றும் காற்று போன்ற சுத்தமான புதுப்பிக்கத்தக்க சக்திகளைப் பயன்படுத்துவதில் நாங்கள் பெரும்பாலும் நெருக்கமாகப் பணியாற்றுவதால், சுற்றுச்சூழல் செறிவூட்டல் குறித்த எமது கூட்டான சிந்தனை உலகளாவிய காலநிலையை எதிர்த்துப் போராடுவதற்கு சாதகமாக பெருமளவில் பங்களிப்புச் செய்யும்.

பசுமைப் பொருளாதாரமானது, எமது சூழல் இயற்கையாகவே பரிசளிக்கப்பட்ட பரந்த நீலப் பொருளாதாரத்தால் பாராட்டப்பட்டுள்ளது. எமது தொடர்ச்சியான உரையாடல்கள் இதை மேலும் நிரூபிப்பதாக அமையும்.

பிரதமர் கௌரவ ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் கடந்த செப்டம்பரில் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான தனது மெய்நிகர் உச்சி மாநாட்டின் போது அறிவித்த, இந்தியாவிலிருந்து விரிவுபடுத்தப்பட்ட பௌத்த பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கான இந்தியாவின் 15 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகையானது பரஸ்பர ஆலோசனைகள் மூலம் பயன்படுத்தப்படும். ஒப்புக்கொள்ளப்பட்ட திகதியில் திறந்ததாக அறிவிக்கப்படவுள்ள யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தை 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான செலவில் நிர்மாணித்த இந்தியாவுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று காலை அதிமேதகு ஜனாதிபதியை சந்தித்த கௌரவ கலாநிதி. ஜெய்சங்கர், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார்.

இலங்கைக்கு அளித்த ஆதரவுகளுக்காக வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் அவர்களுக்கு மற்றுமொரு முறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், புத்தாண்டில் அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறுவதற்கும், மற்றும் அவரது சிறந்த ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேன்மைதங்கிய தங்களுக்கு மும்மணிகளின் ஆசீர்வாதம் உரித்தாகட்டும்.

நன்றி.

.........................................

The full video can be viewed at: https: //m.youtube.com/watch?v=Ygwn1dgKiYA

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close