அன்புக்குரியவர்களை இழந்தமைக்காக வெளிநாட்டுப் பிரஜைகளின் குடும்பங்களுடனான ஒருமைப்பாட்டை இலங்கை வெளிப்படுத்தியது

அன்புக்குரியவர்களை இழந்தமைக்காக வெளிநாட்டுப் பிரஜைகளின் குடும்பங்களுடனான ஒருமைப்பாட்டை இலங்கை வெளிப்படுத்தியது

IMG_4250-21-04-20-01-06

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இலங்கையிலும், வெளிநாடுகளிலுமுள்ள தூதரகங்களுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்ட பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது:

'ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற கொடூரமான வன்முறைச் செயல்களில் பலியான மற்றும் பாதிப்புற்ற அனைத்து உயிர்களையும் இன்றைய தினத்தில் இலங்கை நினைவு கூர்கின்றது. தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் துன்பங்களை நாம் பகிர்ந்து கொள்வதுடன், தமது நாட்டின் பிரஜைகளை இழந்த நாடுகளுடன் நாங்கள் ஒற்றுமையாக துணை நிற்கின்றோம்'.

உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களால் வணங்கப்பட்ட ஒரு நாளில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீதான இந்தத் தாக்குதல்களில் இலங்கையர்கள் மற்றும் உலகெங்கிலுமுள்ள 14 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலாக சுமார் 270 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, டென்மார்க், இந்தியா, ஜப்பான், நெதர்லாந்து, போர்த்துக்கல், சவுதி அரேபியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உள்ளடங்குவர்.

இந்தத் திகதியையும், இலங்கையில் பல உயிர்கள் இழக்கப்பட்டமையையும் நினைவுகூரும் வகையில், இந்தத் தாக்குதல்களில் தமது நாட்டுப் பிரஜைகளை இழந்த அங்கீகாரம் பெற்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள், அந்த வெளிநாட்டுப் பிரஜைகளின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு, இலங்கையின் வருத்தத்தையும், தொடர்ச்சியான ஒற்றுமையையும் தெரிவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். ஏனையவர்களுக்கு அவர்களது வெளிநாட்டு அலுவலகங்களினுடாக முறையான இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டன. துக்கம் மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகியவற்றை நினைவுகூரும் இந்தத் தருணத்திலும்,  அதிகாரிகளுக்கு கருணையும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

21 ஏப்ரல் 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close