மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,
உலக இளைஞர்கள்
உலக இளைஞர் திறன் தினத்தில் எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையை முன்னிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். அதிவேக தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக தரமான கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கான அணுகல் ஒருபோதும் முக்கியத்துவம் பெறாததொரு உலகில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
இந்தத் தொற்றுநோய்க்கு மத்தியில், 2020ஆம் ஆண்டில் உலக இளைஞர் திறன் தினமானது, வித்தியாசமாக சிந்திப்பதற்கும், எதிர்காலத் திறன் தேவைகளை மீண்டும் மதிப்பீடு செய்வதற்குமானதொரு தினமாக அமைகின்றது. இந்த நாளில் நாம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதிலும், எதிர்காலத்தை மனதில் வைத்து புதிய தொழில்களைத் தேடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு உள்ளூர் மற்றும் பிராந்தியத் தேவைகளில் கவனம் செலுத்துவதற்காக திறன் குறித்த எமது முந்தைய மதிப்பீடுகள் மீளாய்வு செய்யப்படல் வேண்டும். கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் நாளை எப்படி இருக்கும் எனக் கணிப்பது கடினம், எனினும் மாற்றங்கள் வந்துவிட்டன, வேலை செய்யும் உலகம் மற்றும் திறன் மாற்றம் ஆகியன தேவைப்படும் என்பது நிச்சயமாகும்.
இன்று, உலக இளைஞர் திறன் தினத்தை இலங்கை நினைவுகூர்வதுடன், 'நெகிழ வைக்கும் திறமையான இளைஞர்களை வளர்த்தல்' என்ற தேசியக் கருப்பொருளின் கீழ் இணைய வழியில் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கருப்பொருளைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தின் தேசியத் தலைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொழில் பயிற்சியை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான ஆதரவையும் முயற்சியையும் வழங்கும் தொற்றுநோய் நிலைமையின் போது நாம் அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றோம் ஆதலால், இந்த ஆண்டு உலக இளைஞர் திறன் தினம் முன்னெப்போதையும் விட முக்கியமானதாகும்.
இலங்கையும், போர்த்துக்கல்லும் இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து அதன் அனைத்து உறுதிப்பாடுகளுடனும் நடாத்தியுள்ளன. இணைய வழித் தளங்களில் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி வகுப்புக்களை இலங்கை வெற்றிகரமாக நடாத்துகின்றது. இது கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சரியான நேரத்திலான முன்முயற்சியாகும். இணையவழி பயிற்சித் திட்டங்களில் சுமார் 60% - 70% ஆன மாணவர்கள் பங்கேற்பதுடன், முன்னேறுவதற்கான நம்பிக்கையை இது எமக்கு அளிக்கின்றது. எமது பயிற்சித் திறனை விரிவுபடுத்துவதற்கும், வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் கற்றல் தேவைகளை ஆதரிப்பதற்கும் இந்த இணையவழித் தளம் உதவும்.
எமது தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக, 'திறன் கடவுச்சீட்டை' அறிமுகப்படுத்த முடிந்தது. இது இலங்கையில் தொழிற்பயிற்சியின் பொற்காலத்திற்கு நுழைவதைக் குறித்து நிற்கின்றது. மேலும், இது தொழில் உலகில் உலகத்தரம் வாய்ந்த அங்கீகாரத்தையும் வழங்கும். இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோய் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர், நெருக்கடியால் தொழில்களை இழந்த மக்களை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துகின்றோம். புதிய தொழில் வாய்ப்புக்களுக்குப் பொருத்தமான திறமையான வேட்பாளர்களை வளர்ப்பதற்காக, அவர்களுக்கான மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தை நாம் ஆரம்பித்தோம். தேசியக் கற்கைத் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுவுடன் (நைட்டா) இணைந்து 100,000 இளைஞர் திறன் அபிவிருத்தித் திட்டங்களை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடங்கி வைத்தார்.
நாணயத்தின் மறுபுறத்தில், தனிநபர் ஒருவர் கட்டத்திற்கு வெளியே சிந்தனைகளை மேற்கொள்வதற்கும், நெருக்கடியை சமாளிப்பதற்காக முன்னர் செயற்படுத்தப்படாத உத்திகளைப் பயன்படுத்துவதற்கும் இந்தத் தொற்றுநோய் நிலைமை தள்ளியுள்ளது. தொற்றுநோயிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் டி.வி.இ.டி. திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றில் நீடித்த மற்றும் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்க வேண்டும். கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான புதிய தீர்வுகள் கல்வி மற்றும் பயிற்சி முறைகளில், குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மிகவும் அவசியமான கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரலாம். தனியார் துறையுடன் இணைந்து அரசு இது தொடர்பில் முக்கியமானதொரு பங்கினை வகிக்கும். திறன்களுக்கான பயிற்சியை புதிய நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகின்றது.
எமது தேசத்தின் எதிர்கால இளைஞர்களுக்கான திறன் பயிற்சித் திட்டங்களின் தரத்தையும், பொருத்தத்தையும் மேம்படுத்துவதற்காக இலங்கையில் ஆற்றிய பணிக்காக, சர்வதேச தொழிலாளர் சட்டம் மற்றும் யுனெஸ்கோ ஆகியவற்றுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதற்காக இந்த சந்தரப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கின்றேன்.
நன்றி.