சீனக் கமியூனிசக் கட்சியின் (CPC) மத்திய குழுவின் சர்வதேசத் துறைக்கான பிரதி அமைச்சர் சன் ஹயான், இலங்கை-சீன உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றாக, 2024 நவம்பர் 23 அன்று இலங்கை வந்தடைந்தார்.
இவ்விஜயத்தின் போது, பிரதி அமைச்சர் சன் ஹயான், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை, 2024 நவம்பர் 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து, மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் உறவுகளை மேலும் விரிவுபடுத்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விஜயத்தின் போது பிரதி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவையும் சந்தித்தார்.
பிரதி அமைச்சர் சன் ஹயானுடன் சீனக் கமியூனிசக் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச துறைக்கான பிரதி பணிப்பாளர் நாயகம் லின் டாஓ மற்றும் சீனக் கமியூனிசக் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச துறைக்கான பணிப்பாளர் லீ ஜின்யான் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2024, நவம்பர் 27