வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான கலந்துரையாடலின்போது இலங்கையின் அண்மைய முன்னேற்றத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்களுக்கான ஐக்கிய அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லு வரவேற்றுள்ளார்

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான கலந்துரையாடலின்போது இலங்கையின் அண்மைய முன்னேற்றத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்களுக்கான ஐக்கிய அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லு வரவேற்றுள்ளார்

 

வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்க உதவிச் செயலாளர் மற்றும் தூதுவர் டொனால்ட் லூவை, 2024, மே 13 அன்று வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சில் சந்தித்து, இலங்கை - அமெரிக்க இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.

வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன, பொருளாதார முன்னணியில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த, திறந்த சந்தை வளர்ச்சியை மேம்படுத்தும் உத்திகள் மற்றும் இலங்கை மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உதவிச் செயலாளர் லுவிடம் விளக்கினார். ஆட்சி, சட்ட ஒழுங்கு, நிதியியல் தொலைநோக்கு பார்வை, மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கூறினார். வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை திறம்பட கையாள்வதற்கும் கடல்சார் வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கும் கடற்துறை உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடினார்.

உதவிச் செயலாளர் லு, சர்வதேச நாணய நிதிய செயல்முறையில், இலங்கை மக்களும் அரசாங்கமும் மேற்கொண்ட அளப்பரிய முயற்சியையும் மற்றும் அதற்கு கிடைத்த சாதகமான  முடிவுகளையும் பாராட்டினார். ஊழலுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டதை அவர் பாராட்டியதுடன், அதன் அமுலாக்கம் மற்றும் பரந்த பேரண்டப்பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தனது தொடர்ச்சியான ஆதரவையும் உறுதி செய்தார். உதவிச் செயலாளர், இலங்கையை அனைத்து முனைகளையும் உள்ளடக்கிய முறையில், செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஊக்குவித்தார்.

உதவிச் செயலாளர் லூவுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும்  வருகை தந்திருந்தனர். வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவுடன் சட்டமா அதிபர் திணைக்களம், நிதி அமைச்சு, சர்வதேச வர்த்தக அலுவலகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர், ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவைச் சந்தித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

13 மே  2024

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close