வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் சிங்கப்புருக்கான இடைத்தரிப்பு விஜயம்

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் சிங்கப்புருக்கான இடைத்தரிப்பு விஜயம்

 வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்கள் 2022 டிசம்பர் 07ஆந்  திகதி சிங்கப்பூருக்கான குறுகிய இடைத்தரிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அமைச்சர் சிம் ஆனை சந்தித்த அமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். குறிப்பாக இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பதன் நோக்கத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.

சுகாதார அமைச்சு மற்றும் சிங்கப்பூர் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் சிரேஷ்ட  இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஜனில் புதுச்சேரியை சந்தித்த அமைச்சர், சுகாதாரத் துறையில் இலங்கையர்களுக்கான மேலதிக வேலை வாய்ப்புக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடினார். சுகாதார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் சிங்கப்பூர் தாதியர் சபை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கைக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயம் மற்றும் செவிலியர்களுக்கான ஆரம்ப ஆட்சேர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்து, அதைத் தொடர்ந்து நீண்ட கால ஆட்சேர்ப்பு வாய்ப்புக்களை நன்கு புரிந்து கொள்வதற்கான ஆய்வு விஜயம் ஆகியவற்றைஇரு அமைச்சர்களும் வரவேற்றனர்.

அமைச்சருடன் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்தன மற்றும்  உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட பணியாளர்களும் இந்த சந்திப்புக்களில் இணைந்திருந்தனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

சிங்கப்பூர்

2022 டிசம்பர் 07

Please follow and like us:

Close