இலங்கையின் கலாச்சார நடனத்தை ஐக்கிய இராச்சியத்தில் காண்பிக்கும் முனைப்பில் வொஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகம்,Natamu நாட்டிய கல்லூரியுடனிணைந்து மேரிலாண்ட் இல்,ஏற்பாடு செய்திருந்தVes Mangalya (முகமூடி விழா), 2023 ஆகஸ்ட் 19 அன்று, தூதரக வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் செழுமைமிக்க கலாச்சார பாரம்பரியம் மற்றும் அழகாக ஒருங்கிணைந்தகலை,கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் விமர்சையான கொண்டாட்டமே Ves Mangalyaஆகும்.
இது மாணவனின் திறமையை அனைவரின் முன்னே அரங்கேற்றும் முக்கியத்துவமான நிகழ்வொன்றாக மட்டுமல்லாது, உலகலாவிய பார்வையாளரை மெய்ச்சிலிர்க்கவைத்து, வசியப்படுத்தும் கலாசார நடனத்தின் பெருமைக்கானசாட்சியமாகவும்அமைகிறது. இந்நிகழ்வானது நாட்டியக்கல்லூரி மாணவனின், நாட்டிய பயிற்சி பயணத்தின் நிறைவில், ஒரு பரிபூரண கலைஞனாக அடையாளப்படுத்தும், பட்டமளிப்பையும், அரங்ககேற்றத்தையும் ஒன்று சேர்த்த மிகமுக்கிய அத்தியாயமாகும்.
Ves Mangalya நடைபெறும் குறித்த தினத்தில், ஒரு மாணவனும் நான்கு மாணவியரும் நேர்த்தியாக, பாரம்பரிய நடன உடையணிந்து, உரியவாறு அலங்காரம் செய்துகொண்டு, வொஷிங்டன் பௌத்த விகாரை, மேரிலாண்ட் பௌத்த விகாரை, ஹேகஸ்டவுனிலுள்ள சம்புத்தாலோக விகாரை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்க பிக்குகளிடம் சடங்கு ரீதியாக ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். பாரம்பரிய சடங்குகளைத் தொடர்ந்து, நிகழ்வானது பாரம்பரிய மேளதாள இசைக்கு மத்தியில் விளக்கேற்றி முதல்நடனமான, மங்கள நாட்டிய நிகழ்வுடன் விமர்சையாக தொடங்கப்பட்டது.
தூதுவர் சமரசிங்ஹ, தனது வரவேற்புரையில், இவ்வெற்றிகரமான நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கும், ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையின் பாரம்பரிய நடன கலையை நிலைநாட்டுவதில் தொடர்ந்த முயற்சிகளுக்கும் பாரம்பரிய நடன பள்ளியை பாராட்டினார். இலங்கைக்கு தொலைவில் வசிக்கும் இளம் நடன கலைஞர்கள், இலங்கையின் பாரம்பரிய நடனத்தைக் கற்று, அதனை வளர்ப்பதற்கு எடுக்கும் முயற்சியையும், அதற்கான நாட்டத்தையும் ஊக்கப்படுத்தும் முகமாகவே, தூதுவர், தூதரக வளாகத்தை வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார். அவர் இலங்கை நடனக்கலைஞர்கள் நடனப்பட்டம் பெறுவது ஒவ்வொரு வருடமும் தொடருமெனவும், அவர்கள் எதிர்காலத்தில், ஐக்கிய இராச்சியத்திற்கான, இலங்கையின் கலாச்சார தூதுவர்களாக விளங்கி, பாரம்பரிய நடனக்கலையை அடுத்த தலைமுறைக்கு பயிற்றுவிப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Bulath padayaமற்றும் Yak Anuma Dance நிகழ்வுகளை தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஆசான்களை வணங்கி ஆசிர்வாதம் பெறும் நிகழ்வும், விழாவில் குழுமியிருந்த 250இற்கு பார்வையார்களின் கண்களுக்கு விருந்தளித்தன. இலங்கையில் இருந்தும் நியூயோர்க்கிலிருந்தும் வந்திருந்த தேர்ச்சி பெற்ற நடன கலைஞர்கள் மற்றும் மேளவித்துவான்கள் பாரம்பரிய கண்டிய நடனத்தை மேடையேற்றி இருந்தார்கள். நிகழ்வின் முடிவில், புதியதாய் தயாரிக்கப்பட்ட சிலோன் தேநீர் உட்பட, இலங்கையின் பாரம்பரிய சிற்றுண்டிகள் பார்வையாளர்களுக்கு பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வுக்கு இலங்கையர்கள், பல ஐக்கிய இராச்சிய மக்கள், இராஜாங்கப்படை உறுப்பினர்கள் ஆகியோர் வருகை தந்திருந்தனர். Natamu இலங்கை பாரம்பரிய நடனக்கல்லூரியானது, கலாச்சார பாதுகாப்பு, பல்கலாச்சார விழிப்புணர்வு, கலாச்சார பல்வகைமை, அதற்கான அணுகுமுறை போன்றவற்றை வளர்க்குமொரு சமுதாயத்தை உருவாக்குவதில், கலங்கரை விளக்கமாக திகழும்,சதுரி விக்கிரமாராச்சியின் தலைமையில்,2012 ல் நிறுவப்பட்டது.
இலங்கை தூதரகம்
வாஷிங்டன் டி.சி
2023 ஆகஸ்ட் 23