1997 மே 7 ஆந் திகதி லெபனானுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
மைல்கற்கள்
மைல்கற்கள்
இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் முன்னெடுப்பினால் 1999 இல் ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டத்தொடரானது 554ஃ115 தீர்மானத்தை ஏற்று பின்பற்றியது. வெசாக் தினம் தற்போது ஐக்கிய நாடுகள் கடைபிடிக்கும் தினமாக உலகளவில் பின்பற்றப்படுகிறது.
2003 ஜனவரி 16 ஆந் திகதி சனநாயக வியட்னாம் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
2013 பெப்ரவரி 8 ஆந் திகதி பஹ்ரேனுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
2013 ஜுலை 1 ஆந் திகதி நைஜீரியா கூட்டாட்சி குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
2013 டிசம்பர் 11 ஆந் திகதி சீஷெல்ஸ் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
2014 ஜுலை 2ஆந் திகதி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1945 ஒக்டோபர் 24 ஆந் திகதி ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அதன் 70 ஆவது வருடத்தையும், 1955 டிசம்பர் 14 ஆந் திகதி ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடாக இணைந்து கொண்ட இலங்கை அதன் 60 ஆவது வருடத்தையும் 2015 ஆம் ஆண்டு பூர்த்தி செய்தன.
எத்தியோப்பியாவின் இலங்கைத் தூதரகமானது, 2017 பெப்ரவரி 7 ஆந் திகதி எத்தியோப்பியா மற்றும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
2017 டிசம்பர் 13 ஆந் திகதி கண்ணிவெடி பாவனை, கையிருப்பு, உற்பத்தி மற்றும் ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பரிமாற்றல் மற்றும் அவற்றின் அழிவு தொடர்பான தடை மீதான சாசனமாக அறியப்படும் ஒட்டாவா ஒப்பந்தம், ஆளணி எதிர் கண்ணிவெடிகள் தடை சாசனம் அல்லது கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்ட 163 ஆவது நாடாக இலங்கை விளங்குகின்றது.
2018 மார்ச் 1 ஆந் திகதி கொத்து வெடிமருந்துகள் சாசனத்தின் சட்ட ஆவணத்தில் இலங்கை இணைந்தது. கொத்து வெடிமருந்துகளின் பாவனை, உற்பத்தி, பரிமாற்றல் மற்றும் கையிருப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையிலான மனிதாபிமான கட்டாயமாக்கப்பட்ட சட்ட ஆவணமாக இச்சாசனம் திகழ்கிறது.
கொஸ்மொஸ் ரிசாட்ஸன் ஆகியோர் நிவ் யோர்க்கில் 25 ஜூன் 2019 அன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதினைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கமும் சாய்ன்ட் லூசியா அரசாங்கமும் 25 ஜூன் 2019 முதல் இரண்டு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்தன.
எலிசபெத் தொம்சன் ஆகியோரினால் 2019 ஜூன் 28ஆந் திகதி நியூயோர்க்கில் வைத்து ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதன் பிரகாரம், 2019 ஜூன் 28ஆந் திகதி முதல் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கமும், பார்படொஸ் அரசாங்கமும் தீர்மானித்தது.