ஸ்காபரோவில் 2023 ஆம் ஆண்டின் முதல் நடமாடும் கொன்சியூலர் சேவை

ஸ்காபரோவில் 2023 ஆம் ஆண்டின் முதல் நடமாடும் கொன்சியூலர் சேவை

டொரன்ரோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான  தனது முதல் நடமாடும் கொன்சியூலர் சேவையை ஸ்காபரோவில் 2023 ஜனவரி 07ஆந் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்தது.

300,000 க்கும் மேற்பட்ட கனேடிய இலங்கையர்களின் கொன்சியூலர் சேவை சார்ந்த  தேவைகளை எளிதாக்குவதற்காக ஸ்காபரோவில் மாதாந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகளை  துணைத் தூதரகம் நடாத்துகின்றது. பொதுமக்களுக்கு திறமையான மற்றும் பயனுள்ள  சேவைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் கொள்கை முன்னோக்குகளுக்கு இணங்க பொதுமக்களின் வசதிக்காக இந்த ஏற்பாடுகளை செய்ய தூதரகம் முடிவு செய்துள்ளது. வார இறுதி  நாட்களில் நடமாடும் சேவைகளை மேற்கொள்வதன் மூலம், கனேடிய இலங்கைச் சமூகத்திற்கு  பல்வேறு கொன்சியூலர் சேவைகளுக்கான பரந்த அணுகலை வசதியாக வழங்குகின்றது.

இம்முறை நடமாடும் கொன்சியூலர் சேவையில் 600க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர். கனேடிய இலங்கை சமூகத்திற்கான அரசாங்கத்தின் வசதிகளை வரவேற்கும் சைகையாக,  சில சமூகத் தலைவர்கள் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளும் மக்களுக்கு அலுவலக இடத்தையும் சில சிற்றுண்டிகளையும் ஏற்பாடு செய்தனர். இந்த நடமாடும் சேவையானது அரசாங்கத்திற்கு எந்தவித மேலதிக செலவுமின்றி வலுவான சமூக ஆதரவுடன் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

இலங்கையின் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கனேடிய இலங்கை  சமூகம் புத்தாண்டை சந்திக்கவும், வாழ்த்துக்களைப் பகிர்வதற்கும் பொதுவான தளத்தை  உருவாக்கும் அதே வேளையில் துணைத் தூதரகத்தின் சமூக ஈடுபாடுகளை வலுப்படுத்துவதற்காக இந்த நிகழ்வை தூதரகம் பயன்படுத்திக் கொண்டது.

நடமாடும் கொன்சியூலர் சேவையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் துணைத் தூதரகம்,

டொரன்டோ

2023 ஜனவரி 25

 

 

Please follow and like us:

Close