வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் சர்வதேச உணவுத் திருவிழா 2022 இல் பங்கேற்பு

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் சர்வதேச உணவுத் திருவிழா 2022 இல் பங்கேற்பு

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம், வியட்நாமின் வெளியுறவு அமைச்சால் ஏற்பாடு  செய்யப்பட்டு, 2022 டிசம்பர் 11 அன்று ஹா நொய் நகரில் நடைபெற்ற வருடாந்த சர்வதேச உணவுத் திருவிழாவில் பங்கேற்றது,இந்த வருடாந்த நிகழ்வின் 10வது மாநாட்டில், இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச நிறுவனங்கள், ஹா நோயில் உள்ள சர்வதேச அரச சாரா நிறுவனங்கள், வெளியுறவு அமைச்சின் மாகாண அலுவலகங்கள், மாகாண அரசுகள் மற்றும் வியட்நாமிய உணவு மற்றும் பானத் துறைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக இலங்கைக் கூடம் அமைந்திருந்ததுடன், உண்மையான  இலங்கை உணவுகளான கொத்து ரொட்டி மற்றும் அப்பம் ஆகியவை நேரடியாக தயாரிக்கப்பட்டன. டில்மா - சிலோன் டீ - வியட்நாமும் இந்நிகழ்வில் பங்குபற்றியதுடன், இலங்கையின் குறுகிய உணவுகளுடன் சிலோன் தேநீரைப் பரிமாறியது. வியட்நாமியரும் வெளிநாட்டவரும் இலங்கை உணவையும் அன்பான விருந்தோம்பலையும் அனுபவித்தனர்.

131 கூடங்களை உள்ளடக்கிய உணவுத் திருவிழாவில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர்.  ஹா நோய் மற்றும் வியட்நாமின் ஏனைய முக்கிய நகரங்கள் மற்றும் மாகாணங்களில் உள்ள இலங்கை சமூகத்தினரும் இந்த நிகழ்வில் தீவிரமாக பங்கேற்றதுடன், மிகவும் வெற்றிகரமான ஊக்குவிப்பு நிகழ்ச்சியை நடாத்துவதற்கு தூதரகத்திற்கு தாராளமான உதவிகளை நல்கினர்.

இலங்கைத் தூதரகம்,

ஹா நோய்

12 டிசம்பர் 2022

Please follow and like us:

Close