சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில்  கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில்  கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2022 டிசம்பர் 16ஆந் திகதி சான்சரி வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வை கொண்டாடியது.

இலங்கை மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தியையும், ஆசிகளையும் வழங்குவதற்காக வண. வி.எஸ். விஜயகுமார் அழைக்கப்பட்டார். பிரபல தொகுப்பாளர் பி.எச். அப்துல் ஹமீது கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், சென்னையில் உள்ள சி.எஸ்.ஐ. புத்துயிர் விசேட பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டனர். நிகழ்வில் லூத்தரன் மென்ஸ் வொய்ஸ் என்ற ஆண் பாடகர் குழுவினர், விசேட பாடசாலையின் மாணவர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் கிறிஸ்மஸ் பாடல்களை இசைத்தனர்.

 

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022 டிசம்பர் 21

Please follow and like us:

Close