ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ‘இலங்கையின் நண்பர்கள்’ நிகழ்வில் தூதுவர் ஆசிர்வாதம் பிரஸ்ஸல்ஸில் இரவு உணவு விருந்தில் கலந்துகொண்டமை

 ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ‘இலங்கையின் நண்பர்கள்’ நிகழ்வில் தூதுவர் ஆசிர்வாதம் பிரஸ்ஸல்ஸில் இரவு உணவு விருந்தில் கலந்துகொண்டமை

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம், இலங்கை நண்பர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MEPs) குழுவிற்கு 2023 செப்டெம்பர் 5, அன்று தனது, உத்தியோகபூர்வ இல்லத்தில், ஒரு கவர்ச்சிகரமான மற்றும் தகவலளிக்கும் வகையிலான, இரவு உணவு விருந்து வேளையொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியான ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) உறுப்பினரான செக் குடியரசைச் சேர்ந்த Tomáš Zdechovský, இலங்கை நண்பர்கள் குழுவின் தலைவர், மற்றும் அடையாளம் மற்றும் ஜனநாயகம் (ID) கட்சியின் உறுப்பினரும், உப தலைவருமான, ஜெர்மனியைச்சேர்ந்த Maximilian Krah உட்பட 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம், இலங்கைக்கான, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு, சுற்றுலா, ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நாட்டை பொருளாதார சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான கடுமையான பொருளாதார கொள்கை நடவடிக்கைகள் மூலம் பொருளாதார மீட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் மூலோபாயத்திட்டம் ஆகியவை தொடர்பிலான விரிவான கண்ணோட்டத்தை  முன்வைத்தார். இச்சவாலான காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியானதும் நிலையானதுமான, ஆதரவு மற்றும் உதவிகளுக்கு தூதுவர் பாராட்டு தெரிவித்ததுடன், குறிப்பாக அதன் வர்த்தக கருவியான ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP Plus, வரிச்சலுகைகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கும், பெண்கள் உட்பட்ட இலங்கையின் சமூக கட்டமைப்பின் துறைகளில் தாக்கம் செலுத்தக்கூடிய பல்வேறு துறைகளுக்கு ஆதரவுடனான வலுவூட்டலின் மூலம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. அடுத்த தசாப்தத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP இன் புதிய ஒழுங்குமுறை தொடர்பான விவாதங்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், GSP Plus தொடர்பான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தயாராகவுள்ள, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் செழிப்புக்கான புதியதொரு பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP Plus  வரிச்சலுகைகளை தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை தூதுவர் ஆசிர்வதம் வலியுறுத்தினார்.

தூதுவர் ஆசிர்வாதம், சுற்றாடல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் தயார்நிலை திட்டங்கள் குறித்து ஆராய்ந்தார். 2050 ஆம் ஆண்டளவில் நிகர-பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் இலட்சிய இலக்கை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன், காடுகளை விரிவுபடுத்துவதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கும் நடந்து வரும் முயற்சிகளை எடுத்துரைத்தார். மேலும், இந்த பசுமை ஆற்றல் மாற்றத்தை எளிதாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை அவர் குறிப்பிட்டார். இலங்கையின் நண்பர்கள் குழுவின் தலைவரான  Tomáš Zdechovský (MEP ), உறுதியான கொள்கைத் தலையீடுகள் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நாட்டை நேர்மறையான பாதையில் இட்டுச் செல்லவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். சர்வதேச வர்த்தகத்திற்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவில் (INTA) தெற்காசியாவிற்கான நிலையான அறிக்கையாளரான, துணைத்தலைவர் Maximilian Krah, இலங்கையின் செயற்திறன்மிக்க பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உரிய பாராட்டை வழங்கியதுடன், நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP Plus வரிச்சலுகைகள் தொடர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின், இலங்கை நண்பர்கள் குழு அங்கத்தவர்கள் ( MEPs ), பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் உறுதியாக அடித்தளமாக உள்ள இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் தற்போதுள்ள கூட்டுறவைப் பாராட்டினர்.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பங்குடைமையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முயற்சிகளின் முன்னேற்றம், சவால்கள் மற்றும் அபிலாஷைகள் பற்றிய நுண்ணறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு தளத்தை இந்த இரவு விருந்தானது வழங்கியது.

இலங்கை தூதரகம்

பிரஸ்ஸல்ஸ்

08 செப்டம்பர் 2023

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close