பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆதலால், கொழும்பிலுள்ள சிலின்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு 'ஏற்றுமதி ஆவணங்களை' சான்றுறுதிப்படுத்திக் கொள்வதற்காக பிரிவுக்கு வருகை தரும் ஏற்றுமதியாளர்கள் உட்பட பார்வையாளர்களுக்காக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிராந்திய கொன்சுலர் அலுவலகங்களால் மேற்கொள்ளப்படும் ஆவண சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவித்தல் வரை வழங்கப்பட மாட்டாது என்பதையும் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் இறப்புக்கள் மற்றும் இறப்பு தொடர்பான ஆவண உதவிகள் சார்ந்த கோரிக்கைகளுக்காக தயவுசெய்து பின்வரும் வகையில் தொடர்பு கொள்ளவும்;
தொலைபேசி இலக்கங்கள்: 0776032252, 0773586433, 0718415623 மற்றும் 0701428246
மின்னஞ்சல்: cypher@mfa.gov.lk
தொலைநகல் இலக்கங்கம்: 0112446091 / 0112333450
வெளிநாட்டு அமைச்சுகொழும்பு 22 அக்டோபர் 2020