வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆதலால், கொழும்பிலுள்ள சிலின்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு மறு அறிவித்தல் வரை பார்வையாளர்களுக்காக மூடப்படுவதுடன், 'ஏற்றுமதி ஆவணங்களை' சான்றளித்தல் தொடர்பான கோரிக்கைகள் மட்டுமே முன் நியமன அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

முன் நியமனங்களை பின்வரும் அவசரத் தொலைபேசி அழைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்:

ஏற்றுமதி ஆவணங்களை சான்றளித்தல்: தொலைபேசி: +94 (011)2338812

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் இறப்புக்கள் மற்றும் இறப்பு தொடர்பான ஆவண உதவிகள் சார்ந்த கோரிக்கைகளுக்காக தயவுசெய்து பின்வரும் வகையில் தொடர்பு கொள்ளவும்;

தொலைபேசி இல.: 0112323015

மின்னஞ்சல்: cypher@mfa.qov.Ik

தொலைநகல் இல.: 0112446091 / 0112333450

 

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 

09 அக்டோபர் 2020

Please follow and like us:

Close