2019 ஆம் ஆண்டில் ஒன்டாரியோ சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் உறுப்பினர் மசோதா 104 தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விடயத்தில், மத்திய மற்றும் மாகாண அதிகாரிகளுடன் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் டொரண்டோவிலுள்ள உதவித் தூதரகம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. இலங்கையில் இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் 'இனப்படுகொலை' தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உட்பட குறித்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான கூற்றுக்களுக்கு உறுதியான எதிர்ப்புக்களை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. விடயங்களை நடுநிலைமையிலான கண்ணோட்டத்தில் நோக்குமாறும், கனடாவிலுள்ள இலங்கைக்கு விரோதமாகச் செயற்படும் சில நபர்களால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களின் அடிப்படையில் பாரபட்சம் மிகுந்த நோக்கில் பரிசீலிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்டுள்ள தனிநபர் உறுப்பினர் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான சித்தரிப்புக்களுக்கு எதிராக கனடாவிலுள்ள பல இலங்கைக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் கனேடிய அதிகாரிகளை அணுகியுள்ளனர்.
இந்த செயற்பாட்டின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கனடாவிலுள்ள தூதரகங்கள் தொடர்ச்சியாக இணைந்து செயற்படும்.