என் பிரபுக்களே, மேன்மையான உரையை நான் வரவேற்கின்றேன். குறிப்பாக இந்தோ - பசுபிக் சார்பாக, எனது கருத்துக்கள் உலகளாவிய பிரித்தானியா மீதானதாக அமையும். எனது சொந்தப் பின்னணியின் அடிப்படையில், நான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வாழ்ந்து பணியாற்றியுள்ளதுடன், ஆசியானின் ஏனைய பகுதிகள் குறித்தும் நன்கு அறிவேன். நான் குறிப்பாக இலங்கை தொடர்பில் உரையாற்றும் அதே வேளையில், அனைத்து தரப்பினரினதும் குழுவின் கூட்டுத் தலைவர் என்ற வகையில் ஆர்வமொன்றை பிரகடனப்படுத்துகின்றேன்.
இலங்கை ஆயுதப் படைகளால் போர்க்குற்றங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையால் இன்று இலங்கையில் பெரும் பதற்றம் நிலவுவதுடன், மையக் குழுமத்தின் தலைவர் என்ற வகையில் ஐக்கிய இராச்சியம் தனது வகிபாகத்தை இந்த விடயத்தில் கொண்டிருக்கின்ற அதே வேளையில், இந்த விடயத்தில் எந்த அர்த்தமும் இல்லை என்ற வகையில் அமெரிக்கா இதிலிருந்து வெளியேறியுள்ளது. 2009 யுத்தமானது சில சிறிய கிளர்ச்சிகளின் விளைவானது அல்ல, எனவே சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என அழைக்கப்படும் ஆயுத மோதலின் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படல் வேண்டும். இது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமொன்றிற்கும், இரண்டு ஜனாதிபதிகள், அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மிகவும் மிதமான தமிழ்த் தலைவர்களைக் கொலை செய்த உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கும் இடையிலான ஒரு போராக இருந்தது. இது லண்டனில் உள்ள கேம்டனில் இருந்து, தமிழ் விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைமையகத்தில், இங்கிலாந்தின் பிரஜையான அன்டன் பாலசிங்கத்தின் தலைமையில் நடாத்தப்பட்ட ஒரு போராகும். இந்த நாட்டில் மில்லியன் கணக்கானவர்கள் சட்டவிரோதமாக வளர்க்கப்பப்பட்டனர். அவரது மனைவி அடீல் இலங்கையில் போரிட்டுக் கொண்டிருந்ததுடன், யுனிசெஃப் குறிப்பிட்டது போல 5,000 க்கும் மேற்பட்ட சிறுவர் படையினரை நியமிப்பதில் நெருக்கமாக ஈடுபட்டார். எந்தவொரு அளவுகோலின் அடிப்படையிலும் இது ஒரு போர்க்குற்றமாகும்.
இலங்கைக்கு ஒருபோதும் விஜயம் செய்யாத மூன்று மனித உரிமை வழக்கறிஞர்களினால் தயாரிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கையுடன் ஐ.நா.வின் குற்றச்சாட்டுக்கள் தொடங்குகின்றன. இன்னும் மோசமான விடயம் என்னவென்றால், குறைந்தது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் அனைத்து ஆதாரங்களும் 20 ஆண்டுகளாக மறைக்கப்பட்டுள்ளன. இது வலுவான சான்றா? ஏன் ரகசியமாக உள்ளது?
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணைகளிலிருந்தான இரண்டாவது ஐ.நா. அறிக்கை பெரும்பாலும் முதல் அறிக்கையான தருஸ்மனை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை: இழக்கப்பட்ட சொர்க்கம்: மீளப் பெறப்பட்ட சொர்க்கம் என்ற எனது புத்தகத்தில் பட்டியலிட்டுள்ள அனைத்து ஆதாரங்களையும் கண்காணிப்பதற்காக நான் மூன்று ஆண்டுகளைக் கழித்தேன். எனது உன்னதமான நண்பருக்கு அதன் ஒரு பிரதியைக் கொடுத்துள்ளேன், ஆனால் அவர் இதுவரை என்னிடம் அது குறித்து குறிப்பிடவில்லை ஆதலால், அவருக்கு அது கிடைக்கப்பெற்றதா என்பது எனக்குத் தெரியாது. தமிழ் இனப்படுகொலைக்கு கோரல்கள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் எனது உறுதியான முடிவு என்னவென்றால் அதிகபட்சம் 6,000 முதல் 7,000 வரையான இறப்புக்களே சம்பவித்துள்ளன. எனது சான்றுகள் சரிபார்க்கப்பட்டுள்ளதுடன், இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை. 6,000 முதல் 7,000 வரையான மரணங்களே சம்பவித்திருப்பதாக அமெரிக்கத் தூதுவர் பிளேக், ஐ.நா. உள்நாட்டுக் குழு, தமிழர்களால் போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பு, மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள், இங்கிலாந்தின் சொந்த இராணுவத் தொடர்பு நிபுணர் மற்றும் பலர் உறுதிப்படுத்திய வகையிலேயே எனது சான்றுகள் அமைகின்றன. ஆனால் சமீபத்தில், மார்ச் 25 ஆந் திகதி பாதுகாப்பு அமைச்சிலிருந்து எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திலும், வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இன்னொரு கடிதத்திலும், 'லெப்டினன்ட் கேணல் காஷ் எழுதிய விடயங்கள்,
..... தகவல்களின் எந்தவொரு சுயாதீனமான சரிபார்ப்பையும் வழங்காமல் .... தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் .... பல்வேறு மூலங்களிலிருந்து வழங்கப்பட்டுள்ளதால், அவற்றை ஒரு சான்று அடிப்படையிலான மதிப்பீடாகக் கருத முடியாது' என மகாராணியாரின் அரசாங்கம் குறிப்பிட்டது.
ஒரு ஆச்சரியம் என்னவென்றால், நான் அனுப்பிய 48 பக்கங்களையுடைய அறிக்கை மிகவும் பயனற்றது என்றால் ஏன் அவை திருத்தியமைக்கப்படுகின்றன. எனது தீர்ப்பில், அந்த மறுசீரமைப்பு உடனடியாக அகற்றப்படல் வேண்டும்.
எமது இராணுவ இணைப்பாளர்கள் மற்றும் எனது சான்றுகளை மட்டுமல்லாமல், ஒதுக்கி வைப்பது தொடர்கின்றது என்பது மிகவும் அற்புதமாகும். எனது உன்னதமான நண்பர்களிடம் நான் குறிப்பிடுவது என்னவென்றால், ஐக்கிய இராச்சியத்தின் மிகச்சிறந்த மனித உரிமை வழக்கறிஞர்களான சேர் டெஸ்மண்ட் டி சில்வா, சேர் ஜெஃப்ரி நைஸ் மற்றும் பலரை ஆலோசகர்களாகக் கொண்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையைப் படியுங்கள். தருஸ்மனைப் பற்றிய அவர்களின் சிறந்த பார்வை என்னவென்றால், அறிக்கைகள் அநாமதேய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையாதலால், உண்மையை நிலைநாட்ட முற்படும் நீதிமன்றத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. இதற்கு மேல் ஏனையவர்களும் இருக்கின்றனர் - அமெரிக்க இராணுவ இணைப்பும் உள்ளது. ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இலங்கை இராணுவம் சரியான முறையில் நடந்து கொண்டதாக அனைத்து அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. 200,000 பேரையுடைய முகாமில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணையின் பார்வை என்னவென்றால், இது ஒரு அரை வதை முகாமாகும். முதலாவது நாள் முதல் செஞ்சிலுவைச் சங்கம் இருந்தபோது எப்படி அது சாத்தியம்? மேலும், அதைப் பார்வையிடச் சென்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களைக் கவனித்த விதத்திற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்தனர்.
முன்னோக்கிச் செல்லுகையில் நான் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றேன். சத்தியமும் நல்லிணக்கமும் ஒரு பெரிய சவாலாகும், ஆனால் 2019 இல் விஜயம் செய்த மிகவும் மரியாதைக்குரிய பிரைமேட் கென்டர்பரி பேராயர், இலங்கை உண்மையாக முன்னேற்றம் அடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் இலங்கை மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளதாக எமது சகாவான பரோனஸ், ஸ்ட்ரூட் அம்மையார், லெகாட்டம் நிறுவகத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்கக் குழுவொன்றை நிறுவுவதற்காக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுமாறு அமைச்சரை நான் கேட்டுக்கொள்கின்றேன். இங்கிலாந்து ஆணையிடுவதற்குத் தெரிவு செய்தால், இலங்கை குறித்த எமது இந்தோ - பசுபிக் மூலோபாயத்திற்கு தெளிவான ஆபத்து உள்ளது என்பதை நான் தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன். இதனால் சீனாவை நம்புவதற்கு மீண்டும் கட்டாயப்படுத்தப்படும் அதே வேளை, இதன் மூலம் கடல் பாதைகள் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படும் என்பதுடன், அதிருப்தி அடைந்த தமிழர்கள் ஒரு சுதந்திர அரசை அமைப்பார்கள். இரண்டு உலகப் போர்களில் எமக்கு உதவிய மக்களையுடைய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் போல்க்லேண்ட்ஸ் வாக்கெடுப்பு தொடர்பாக எமது அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டு உதவிய ஒரு நாட்டிற்கு நன்றி சொல்வதற்கு இது உண்மையில் ஒரு சிறந்த வழியாகுமா?