இலங்கைக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இராஜாங்க அமைச்சர் பாலசூரிய கலந்துரையாடல்

இலங்கைக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இராஜாங்க அமைச்சர் பாலசூரிய கலந்துரையாடல்

இலங்கையை தளமாகக் கொண்டஇந்தோனேசியா, மலேசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய ஆசியான் நாடுகளின் தூதரகத் தலைவர்கள் மற்றும்  அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், இலங்கைக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான சந்திப்பொன்று, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையில் 2023 மார்ச் 30ஆந் திகதி அமைச்சில் வைத்து நடைபெற்றது. இராஜாங்க அமைச்சரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை புத்தசாசன சபையின் செயலாளர் அதி வணக்கத்திற்குரிய முகுனுவெல அனுருத்த தேரரும் கலந்துகொண்டார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் பௌத்த மத இணைப்பு உட்பட ஆசியான் நாடுகளுடன் தொடர்பை வலுப்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை மற்றும் ஆசியான் நாடுகளின் தற்காப்புக் கலைகள், ஆயுர்வேதம் மற்றும் கலைகள் போன்றவற்றின்  வளமான பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பகிர்ந்து கொள்வதும் இந்த விஜயத்தின் பரிமாற்றத்தில் அடங்குவதான இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தெரிவித்தார். விஜயங்களின் பரிமாற்றத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் இலங்கைக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையில் மேலும் ஒத்துழைப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளுக்கான இலங்கை பௌத்த பிக்குகளின் விஜயங்களை ஆரம்பித்தல் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் ஆசியான் நாடுகளின்  முன்னணி பௌத்த விகாரைகளுடன் இலங்கை பௌத்த விகாரைகளை இணைக்கும் வகையிலானதொரு வேலைத்திட்டத்தின் மூலம் பௌத்த மத உறவுகளை வலுப்படுத்துதல் தொடர்பான இராஜாங்க அமைச்சரின் பிரேரணையை ஆசியான் நாடுகளின் தூதரகத் தலைவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மார்ச் 31

Please follow and like us:

Close