வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்

Image 01

2019 மே 29ஆந் திகதியாகிய இன்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்கள் தனது கடமைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக சத்தியப் பிரமானம் செய்துகொண்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு வருகை தந்த போது, இராஜாங்க அமைச்சர் சேனாநாயக்க அவர்கள் வெளிநாட்டு செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, மேலதிக செயலாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களினால் வரவேற்கப்பட்டார்.

கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர், புதிதாக நியமனம் செய்யப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

29 மே 2019

Image 02 image 03 Image 04

Please follow and like us:

Close