ஐ.நாவின் இன அழிப்பை தடுத்தல் தொடர்பான சிறப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு தொடர்பான சிறப்பு ஆலோசகர் ஆகியோரினால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கான இலங்கையின் பதிலளிப்பு

ஐ.நாவின் இன அழிப்பை தடுத்தல் தொடர்பான சிறப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு தொடர்பான சிறப்பு ஆலோசகர் ஆகியோரினால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கான இலங்கையின் பதிலளிப்பு

ஐ.நாவின் இன அழிப்பை தடுத்தல் தொடர்பான சிறப்பு ஆலோசகர் அதாமா டீங்க் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு தொடர்பான சிறப்பு ஆலோசகர் காரன் ஸ்மித் ஆகியோரினால் 13 மே 2019 அன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக, நிவ்யோக்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான நிரந்த வதிவிடப் பிரதிநிதி தூதுவர் கலாநிதி ரொஹான் பெரேரா அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு என்பவற்றை பேணுவதற்கும் பாதுகாப்பு தொடர்பில் நிகழ்கின்ற குழப்ப நிலைகளை முடக்குவதற்கும் அரசாங்கம் இருக்கமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் அவர்களது எதிர்வு கூறத்தக்க இந்த அறிக்கை வெறுமனே பெருப்பிக்கப்பட்ட விடயங்களை மாத்திரமே கையாள்கின்றது; மேலும் அது களநிலவரங்களை வேறு திசைக்குத் தள்ளுவதுடன் ஆழமான மிக முக்கியமான விடயங்களை விட்டுவிட்டு மிக எளிமையான ஓர் ஒடுங்கிய பார்வையில் ஏப்ரல் 21க்கு பிந்திய நிகழ்வுகளுக்கு விளக்கம் கொடுக்க முனைகிறது என சுட்டிக்காட்டினார்.

பதில் கூறலின் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பதில் கூறல் ஆரம்பமாகின்றது.

திரு. ஆதாமா டீன்ங்

இனவழிப்பை தடுத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறுப்பு ஆலோசகர்,

திருமதி. காரன் ஸ்மித்

பாதுப்பதற்கான பொறுப்புணர்வு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஆலோசகர்

திரு டீங் மற்றும் திருமதி ஸ்மித் ஆகியோர்களே,

ஊடகவியலாளர்களுக்கான ஓர் குறிப்பாக உங்களால் வெளியிடப்பட்ட இலங்கையில் “மத அடிப்படையிலான வன்முறைகள் வளர்தல்” தொடர்பாக உங்களது சமிக்ஞைகளை வெளிப்படுத்திய உங்களுடைய 13 மே 2019 இன் கூட்டறிக்கையை இலங்கை அரசாங்கம் கவனமாக மீளாய்வு செய்தது. இயல்பில் மிக சிக்கலான புரிந்து கொள்வதற்கு கடினமான நிகழ்வுகளை மிக எளிமையாகவும் ஒடுக்கமாகவும் நீங்கள் அனுகியிருந்தமையால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.

கடந்த தசாப்தத்தில்,  இலங்கை நாட்டின் மக்கள் கடின உழைப்பால் பெற்றெடுத்த சமாதானத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்தனர் என்பதுடன் கிட்டத்தட்ட முன்று தசாப்தகால பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னர் நல்லிணக்கதிற்கான பாதையிலும் தேசிய மீண்டெழுதல் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். உலகின் பல பாகங்களிலும் வியாபித்துள்ள  ISIL / Da’esh போன்ற கொடூரமான பயங்கரவாத குழுக்களால் ஊக்கமளிக்கப்பட்ட குழுக்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலால் எமக்கு மத்தியில் பிரிவினையை தோற்றுவித்து எமது பல்லின,பல்மத மற்றும் பல்கலாசாரா சமூகத்தின் பிணைப்பை உடைத்தெரியும் நோக்கிலும்  எமது பொருளாதாரத்தின் மீது  பாரியபொரு தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் ஏற்படுத்தப்பட்டதாகும். சமாதானத்தை விரும்பும் அனைத்து இலங்கையர்களும் தாக்குதலின் பின்னரான அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளியேறுவதற்கு முயற்ச்சித்தவண்ணம் உள்ளனர்.

அப்பாவி மக்களின் இழப்பை  நினைத்து நாம் வருந்தும் வேளையில் ஐ.நா செயலாளர் உட்பட சர்வதேச சமூகத்திலுள்ள நன்பர்கள் இடமிருந்து ஆதரவும் அரவணைப்பும் எமக்கு கிடைக்கவண்ணம் உள்ளன. நாங்கள் பயங்கரவாதத்தின் பொது எதிரிக்கு எதிராகவும் அதனுடன் தொடர்புபட்ட  தீவிரவாதம் மற்றும் கொடூரமான பயங்கரவாதம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளுக்கு  எதிராகவும் போராடுகின்றோம் என்பதை நினைவூட்டப்பட்டுள்ளோம். இவை சமீப காலத்தில் உலகின் பல பாகங்களிலும் பல அப்பாவி மக்களின் உயிரை காவுகொண்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், உங்களது கூற்றை பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர், முதலில் இலங்கை அரசாங்கத்திடம் உங்கள் கரிசனைகளை பகிர்ந்து கொள்வது அவசியம் என்று  நீங்கள் கருதாமல் இருந்தமை மிகவும் உணர்வுபூர்வமற்றதும் தவறானதுமாகும். இது சம்பந்தப்பட்ட உங்களது ஆணையின் பிரதான நோக்கங்களுடன் இசைவாக இருந்திருக்க வேண்டும். அதாவது, முன்னெச்சரிக்கை மற்றும் ஆலோசனை வழங்கல். இலங்கையானது  கடந்த பல வருடங்களாக விசேட செயன்முறைகள் மற்றும்   ஆணையுடையோர் உள்ளிட்ட ஐ.நா முறைமை மற்றும் அதனது மனித உரிமைகள் பொறிமுறை ஆகியவற்றுடன் திறந்த மற்றும் ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொண்டுவரும் வேளையில் உங்களது கூற்றானது வெளிவருவதையிட்டு நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் அத்தகைய எட்டு விசேட செயன்முறைகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளன என்பதுடன் அவை அத்தகையை கலந்துரையாடல்களை நடாத்தும் நாடுகளில் ஒன்றாகவும் அது காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையில்,  உங்களின் அலுவலகத்தில் இருந்து ஆரோக்கியமான விமர்சனங்கள் அல்லது அவதானிப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை நாம் வரவேற்கின்றோம். அரசாங்கமானது சட்டத்தையும் ஒழுங்கையும் ஏற்படுத்த முயற்சிக்கும் வேளையில் உங்களது பாரபட்சமான நடவடிக்கையானது பிரச்சினைகளை மென்மேலும் வளரக்கவே உதவும். சட்டம் மற்றும் ஒழுங்கு என்பவற்றை பேணுவதற்கும் பாதுகாப்பு தொடர்பில் நிகழ்கின்ற குழப்ப நிலைகளை முடக்குவதற்கும் அரசாங்கம் இருக்கமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் உங்களது எதிர்வு கூறத்தக்க இந்த அறிக்கை வெறுமனே பெருப்பிக்கப்பட்ட விடயங்களை மாத்திரமே கையாள்கின்றது.

உங்களது அறிக்கை நிகழ்வுகள் பற்றிய வரையறுக்கப்பட்ட புரிதலை உருவாக்குவதோடு கருதுகோள்களடிப்படையிலான ஓர் வெளிப்பாடாகும் என கூற வேண்டியிருக்கின்றது. “ஓர் பெரும்பான்மை பௌத்த நாடான இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கெதிரான சமகால தாக்குதல்களின் ஓர் தொடர்ச்சியை சிறப்பு ஆலோசகர்கள் கண்ணுற்றனர்” மேலும் “இலங்கையில் நிகழ்கால வன்முறை மத ரீதியான சிறுபான்மையினரை அபாயத்திற்குள்ளாக்குகின்ற வகையில் தேசியவாத மற்றும் தீவிரவாத பார்வைகளின் வளர்ந்து வருகின்ற ஓர் அதிகாரத்தை உருவாக்கியிருக்கின்றது.” என்ற கூற்றுக்களை சுட்டிக்காட்டி, உங்களது அறிக்கை, நிகழ்வுகளை பொதுமைப்படுத்துவதோடு உண்மைகளை திரிவுபடுத்துகின்றது. அது ஆபத்தானது. மேலும் பொறுப்பற்றது. அத்தோடு உங்களது அலுவலகங்களின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திர இயல்புடனும் பொருந்துவதில்லை.

உண்மையிலே, இலங்கையின் பெரும்பாலும் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த எமது நேசத்துக்குரிய 250 பேரையும் 45 இலங்கைக்கு வந்திருந்த பயணிகளையும் கொண்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையும் 11 மே வார இறுதியின்போது மிக அவசரமாக முடக்கப்பட்ட சமூக வன்முறையினையும் இணைத்துப் பேசுவதனை உமது கௌரவமான அலுவலகங்களிலிருந்து எதிர்பார்க்கவில்லை. ஊயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆல் ஆகர்ஷிக்கப்பட்ட, அவர்களால் ஊக்கமளிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கோள்ளப்பட்டதே ஒழிய உள்நாட்டு நிலைமைகளின் பெறுபேறு அல்ல என்பதனை உலகு ஏற்றுக்கொண்டுள்ளது என்பது மிகத் தெளிவானதாகும். இந்த தாக்குதல்கள், பிரதானமாக வணக்கத்தில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிராக சர்வதே தீவிரவாத போக்குகளின் ஓர் வடிவமாகும்.

இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையில் 10 வீதமான இரண்டரை மில்லியன் முஸ்லிம்கள் பௌத்த பெரும்பான்மை (70 வீதத்திற்கும் அதிகமான) மற்றும் ஏனைய குழுமங்களுக்கும் மத்தியில் பலநூற்றாண்டுகளாக சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் பௌத்த மற்றும் இஸ்லாமிய புனித தளங்கள் தாக்கப்பட்டு யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட 30 வருட ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாதத்தின் போதான கவலை மிகுந்த ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியில்கூட மதம் வன்முறைக்கான காரணமாக அமையவில்லை. எனினும், மேலேயுள்ள அறிக்கையானது களநிலவரங்களை வேறு திசைக்குத் தள்ளுவதுடன் ஆழமான மிக முக்கியமான விடயங்களை விட்டுவிட்டு மிக எளிமையான ஓர் ஒடுங்கிய பார்வையில் ஏப்ரல் 21க்கு பிந்திய நிகழ்வுகளுக்கு விளக்கம் கொடுக்க முனைகிறது.

அனைத்து வணக்கஸ்தலங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தியமை, உணர்ச்சிபூர்வமான குறுகிய காலத்தில் பொய்த் தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக சமூக வலைத்தளங்களின் பாவனையை வரையறுத்தமை மற்றும் ஆளடையாளத்தை மறைக்கக்கூடி முழு முக மூடலை தடுத்தமை போன்ற முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தாக்குதல்களைத் தொடர்ந்து அரசாங்கம் அவசரமாக அமுல்படுத்தியமை பதிவு செய்வதற்கு பொருத்தமான அம்சமாகும். இந்த நடவடிக்கைகள் இருந்த போதிலும்கூட ஒருவரது சோக மரணத்தை உண்டு பண்ணிய சில ஒதுங்கிய நிகழ்வுகள் இடம்பெற்றமை மிகவும் வருத்தத்திற்குரிய அம்சமாகும். சில மணித்தியாளங்களுக்குள்,  வன்முறை மேலும் பரவாதிருக்குமாறு அரசாங்கமானது துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் குற்றவாளிகள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக    உரிய செயன்முறைக்கு  அவர்கள் உட்பட்டுத்தப்பட்டனர்.

இலங்கையானது உண்மையில் ஒரு பல்கலாசார சமூகமாகும் என்பதுடன் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், நாட்டிற்குள் நடமாடும் மற்றும்  வதிவிடத்தை தெரிவுசெய்வதற்கான சுதந்திரம்  என்பன அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளன. நீங்களும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளவாறு, நம்பிக்கைகளுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அனைத்தும் உள்ளடக்கியவாறான பேணுகையை   ஐ.நா முறைமையின் ஆதரவின் ஊடாக ஏற்படுத்துவதற்கு கணிசமான பணியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.  அரசியல் தலைவர்களிடம் இருந்து வந்த அழைப்புக்கள் மட்டும் அல்லாது கொழும்பு பேராயரிடம் மற்றும் ஏனைய பௌத்த, இந்து மற்றும் இஸ்லாம் மத தலைவர்களிடம்   இருந்து  சமாதானம் மற்றும் சமூகங்கள் மத்தியில் வன்முறை நிகழாமை தொடர்பில்   அழைப்புக்கள்  கிடைத்த வேளையில், நாம் அதனை அவ்வாறே துரிதமாக ஏற்படுத்தியிருந்தோம்.

இலங்கையை குழுக்கிய தீவிரவாத செயற்பாடுகளை மத வேறுபாடுகளுக்கு மத்தியிலான ஓர் உள்நாட்டு பிரச்சினையாக அல்லது மத அமைதியின்மை மற்றும் வன்முறையை உருவாக்குகின்ற உள்நாட்டு பாரபட்ச செயற்பாடுகளின் ஓர் விளைவாக உண்மைக்கு புறம்பாக காட்டி அவற்றின் பயங்கரதன்மையை குறைப்பதற்கு பங்களிப்பு செய்யாமல் இருப்பதில் அனைவரும் கவனமாக இருத்தல் வேண்டும். இது உலகளாவிய பயங்கரவாத வலைப்பிண்ணலின் ஓர் பகுதியாகும் என்பது தெளிவு. அனைத்து பங்காளிகளினதும் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையே இந்த ஆபத்தை தடுப்பதற்கான அடிப்படைகளாகும். பொறுப்புவாய்ந்த அதிகாரபீடங்களிலிருந்து வெளிவருகின்ற பொருத்தமற்ற அறிக்கைகள் வெறுமனே இலங்கையை சமாதானம் மற்றும் அபிவிருத்தி பாதையிலிருந்து திருப்பி விடுவதற்காக தீவிரவாத சிந்தனை கொண்டவர்களின் கைகளை பலப்படுத்திவிடும். இலங்கை மற்றும் அதன் மக்கள் கோரமான தீவிரவாதத்தினால் உருவாகின்ற புதிய சவால்களை எதிர்கொள்வதற்காக, விடயங்களை பகுத்தறிவதற்காக உங்களது அலுவலகங்களிலுள்ள சிறப்புத்தேர்ச்சி கொண்டவர்களிடமிருந்து உதவியையும் ஆலோசனைகளையும் பெறுவதே இத்தருணத்தின் முக்கிய தேவையாகும்.

எமது நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் கஷ்டமான இந்த நிலைமையில் உங்களது புரிந்துணர்வினையும் உதவியையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இப்படிக்கு

கலாநிதி ரொஹான் பெரேரா

தூதுவர்- நிரந்தர வதிவிடப் பிரதிநிதி

பதில்கூறல் முடிவடைகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

24 மே 2019

 

Please follow and like us:

Close