ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழு (UNCLCS) மற்றும் சர்வதேச கடற்பகுதி ஆணையம் (ISBA) ஆகியவற்றுடன் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு

ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழு (UNCLCS) மற்றும் சர்வதேச கடற்பகுதி ஆணையம் (ISBA) ஆகியவற்றுடன் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழு தொடர்பிலான பல்வேறு ஊடக அறிக்கைகள் மற்றும் ஜமைக்காவிலுள்ள, அஃபனசி நிகிடின் சீமவுண்ட் (Afanasy Nikitin seamount)  இன் கோபால்ட் நிறைந்த மேலோட்டத்தை ஆராய்வது தொடர்பான விடயங்கள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் (UNCLOS)  பிரிவு 76ன் படி அனைத்து கடலோர மாநிலங்களும் 200 கடல் மைல்கள் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) அப்பால் நீட்டிக்கப்பட்ட கண்ட அடுக்குகளை கோருவதற்கு உரிமை பெற்றுள்ளன என்பதை அமைச்சகம் நினைவுபடுத்த விரும்புகிறது. இலங்கை ஒரு கடலால் சூழப்பட்ட ஒரு தீவு நாடாக, நுணுக்கமான ஆய்வு மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் ஆகியவற்றிற்கிணங்க, அதன் தொழில்நுட்ப, அறிவியல் தரவு மற்றும் பிற விடயங்களை  ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழுவுக்கு 2009, மே 08 அன்று கண்ட அடுக்கின் வெளிப்புற வரம்புகளை நிறுவியது. இலங்கையானது, வங்காள விரிகுடாவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலங்கள் தொடர்பான புரிந்துணர்வு அறிக்கையில் (SoU)அடங்கியுள்ளவாறான   விஷேட முறைக்கிணங்க தனது சமர்ப்பிப்பை மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழுவானது, 2016, ஒக்டொபர் இடம்பெற்ற இலங்கையின் சமர்ப்பிப்பை பரிசீலிக்க  ஒரு துணைக்குழுவை நியமித்ததுடன், துணை ஆணைக்குழுவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் சமர்ப்பிப்பு தொடர்பாக  ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழு, இன்னும் பரிந்துரைகளை செய்யவில்லை மற்றும் இலங்கையின் சமர்ப்பிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழுவினால்  பரிசீலிக்கப்படுவதால், இலங்கை உரிமை கோரும் பகுதி தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழுவுக்கு இந்தியா விடுத்த கோரிக்கையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான முன்னெட்டுப்புக்கள், இராஜதந்திர வழிகள் மூலம் கையாளப்படுகின்றன.

ஒரு தனி வளர்ச்சியாக, அஃபனசி நிகிடின் கடற்பகுதியில் (Afanasy Nikitin seamount) அமைந்துள்ள கோபால்ட் நிறைந்த ஃபெரோமாங்கனீசு மேலோடுகளை ஆராய்வதற்கான வேலைத் திட்டத்தின் ஒப்புதலுக்காக, ஜமைக்காவின் கிங்ஸ்டனிலுள்ள  சர்வதேச கடற்பகுதி ஆணையத்துக்கு (ISBA) இந்தியா விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

சர்வதேச கடற்பகுதி ஆணையம் (ISBA)என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்டத்தின் பகுதி XI பிரிவு 4 க்கு இணங்க, மாநிலங்களால் அத்தகைய விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் அங்கீகரிக்கவும் நிறுவப்பட்ட அதிகாரமாகும்.

கோபால்ட் நிறைந்த ஃபெரோமாங்கனீசு மேலோடுகளை ஆராய்வதற்கான விண்ணப்பப் பகுதியானது, இலங்கையின் கண்ட அடுக்கு சமர்ப்பிப்பின் கீழ் உரிமை கோரும் ஒரு பகுதிக்குள் முழுமையாக அடங்குவதால், இலங்கை இப்பரிசீலனைகளை சர்வதேச கடற்பகுதி ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், இறுதிப் பரிந்துரைகள் வரை இவ்விடயத்தை நிறுத்தி வைக்குமாறு கோரியுள்ளது. சர்வதேச கடற்பகுதி ஆணையம் இவ்விடயத்தில் பொருந்தக்கூடிய நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழுவின் செயல்முறை மூலம் இலங்கையின் சமர்ப்பிப்பின் அடிப்படையில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இவ்விரண்டு விடயங்களும் தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச கடற்பகுதி ஆணையம் ஆகியவற்றுக்கு முன் செயல்பாட்டில் உள்ளன. அவை  ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் வெவ்வேறு விதிகளை செயல்படுத்த நிறுவப்பட்ட இரண்டு தனித்தனி முக்கிய நிறுவனங்களாகும்.

இவ்விடயங்கள் தொடர்பான இலங்கையின் இறைமை உரிமைகளை வழங்குவது தொடர்பான பொதுக்களத்தில் அண்மைய ஊகங்களானது, உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஜூலை 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close