இலங்கையின் ஜெஃப்ரி பாவா, 15 வது சோல் சர்வதேச கட்டிடக்கலை திரைப்பட விழாவில்  இடம்பெற்றமை

இலங்கையின் ஜெஃப்ரி பாவா, 15 வது சோல் சர்வதேச கட்டிடக்கலை திரைப்பட விழாவில்  இடம்பெற்றமை

சோலில் உள்ள இலங்கை தூதரகம், கொரியாவிலுள்ள பதிவுசெய்யப்பட்ட கட்டிடக் கலைஞர்களுக்கான நிறுவனத்துடன் (KIRA) இணைந்து, 2023 செப்டம்பர் 14, அன்று தூதரக வளாகத்தில், 15வது சோல் சர்வதேச கட்டிடக்கலை திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, “Bawa’s Garden”, திரைப்படத்தின் சிறப்புப் பார்வையை ஏற்பாடு செய்தனர்.

க்ளாரா கிராஃப்ட் இசோனோ இயக்கிய இவ்வாவவணப்படம் விக்ஷேடமாக வெப்பவலைய பிராந்தியங்களுக்கான, நவீனத்துவ பாணியின், முன்னோடியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடங்களை வடிவமைத்த, கட்டிடக் கலை நிபுணர், ஜெஃப்ரி பாவாவின் படைப்புகளைக் கொண்டிருந்தது. முக்கியமாக அவரது பாரிய தோட்டமான, "லுனுகங்க" மீது கவனம் செலுத்தி, அவரை அறிந்தவர்களின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு, பாவாவின் பணி, வாழ்க்கை, மற்றும் படைப்புக்கள் பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

15 வது சோல் சர்வதேச கட்டிடக்கலை திரைப்பட விழா இயக்குனர் கிம் சாங்-கில் திரைப்படத்தின்  திரையிடலுக்கு வருகை தந்தவர்களை அன்புடன், வரவேற்று, சோல் சர்வதேச கட்டிடக்கலை திரைப்பட விழா, கட்டிடக்கலை மேம்பாட்டிற்காக, வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்தியிருந்தார்.

கொரிய குடியரசிற்கான  இலங்கைத் தூதுவர் சாவித்திரி பனாபொக்கே, பாவாவின் பல்தரப்பட்ட மற்றும் வளம் மிக்க பணி குறித்து உரையாற்றுகையில், அவரது படைப்புகள் பெரும்பாலும் பாரம்பரிய இலங்கை கட்டிடக்கலையை உள்ளடக்கியதோடு மட்டுமல்லாமல், இயற்கைக்கூறுகளுடன் ஒன்றி, அவற்றின் காலத்தால் அழியாத நிலையான தன்மையையும் கொண்டிருந்தன எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரது படைப்பாலான கட்டிடங்கள், அமைதி மற்றும் சாந்தமான நிலையை உருவாக்குகின்றன எனவும் கூறினார்.

விருது பெற்ற இலங்கை கட்டிடக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் பாவா அறக்கட்டளை மற்றும் லுனுகங்க அறக்கட்டளையின் அறங்காவலரான, சன்ன தஸ்வத்த, இலங்கை நாடாளுமன்றத்தை உருவாக்குவது முதல் பல தனியார் மற்றும் பொது சொத்துக்களை உருவாக்குவதில், பாவா ஆற்றிய தன்னிகரற்ற சேவையை, பார்வையாளர்களிடம் நினைவுகூர்ந்தார். பாவாவின் வடிவமைப்புகள், வரலாறு மற்றும் சமூகத்தேவைப்பாடுகளை கட்டிடக்கலையினூடாக அற்புதமாக பிரதிபலித்தன என்பதை மேற்கொள் காட்டியிருந்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், பாவா உள்நாட்டு வளங்களை பயன்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தை குறிப்பிட்டதுடன், அவரின் படைப்புக்கள் பெரும்பாலும் வெப்பவலயங்களுக்கு, மிகப்பொருத்தமாய் அமைகின்றன என்பதையும் கூறினார்.

திரையிடலுக்கு முன்னதாக, தூதரக வளாகத்தில் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு, இனிதான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2023, செடேம்பேர் 07 மற்றும் 8, ஆகிய தினங்களில்,, "Bawa's Garden" திரைப்படமானது, விழாவின் பிரதான திரையரங்கில் திரையிடப்பட்டது.

இலங்கை தூதரகம்

சோல்

18 செப்டம்பர் 2023

 

Please follow and like us:

Close