பூட்டானில் நடைபெற்ற பிம்ஸ்டெக் வெள்ளி விழா வினாடி வினா போட்டியில் இலங்கை மாணவர்கள் வெற்றி

பூட்டானில் நடைபெற்ற பிம்ஸ்டெக் வெள்ளி விழா வினாடி வினா போட்டியில் இலங்கை மாணவர்கள் வெற்றி

2023 பெப்ரவரி 15ஆந் திகதி பூட்டானில் நடைபெற்ற பிம்ஸ்டெக் வெள்ளி விழா வினாடி வினா போட்டியில், கண்டி மகாமாய பெண்கள் கல்லூரியின்  சயுரங்கி பிரேமசிறி மற்றும் கண்டி ஹில்வுட் கல்லூரியின் மேதினி அனுபமா வணிகரத்ன ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பிம்ஸ்டெக்கின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், டாக்காவில் உள்ள பிம்ஸ்டெக் செயலகத்துடன் இணைந்து பூட்டானின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சு இந்த வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்தது.

பங்களாதேஷ், பூடான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு பிம்ஸ்டெக் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் இப் போட்டியில் பங்கேற்றனர்.

வினாடி வினா போட்டியில் இலங்கை மாணவர்கள் சிறப்பாக செயற்பட்டு வெற்றியீட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு

2023 பிப்ரவரி 17

Please follow and like us:

Close