இலங்கை சாரணர் குழாம், 25 ஆவது உலக சாரணர் மகிழ்ச்சி கூட்டத்தில் பாங்கேற்றதைத் தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் 12 அன்று கொரியக் குடியரசிற்கான இலங்கைத்தூதுவர் ஸாவித்ரீ பணாபொக்க அவர்களையும், அமைச்சரின் ஆலோசகர் (வர்த்தகம்) சந்திமா அபேரத்ன அவர்களையும் கிம்போ நகரில் சந்தித்தது.
உலக சாரணர் மகிழ்ச்சிக்கூட்டத்தில் கலந்துகொண்ட தங்களது அனுபவம், தங்களது தென்கொரிய பயணம் மற்றும் தங்களின் எதிர்கால குறிக்கோள்கள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்ட சாரணர்களுடன், தூதுவர் சுமுகமானதொரு கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். அவர், ஊடக நிருபராக தனது தொழிற்றகைமையை விருத்தி செய்ய விரும்பும் ஒரு சாரண மாணவனினால் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஒன்றிற்கும் பதிலளித்தார். தூதுவர் அனைத்து சாரணருக்கும், அவர்களின் கொரியக்குடியரசிற்கான வருகையை நினைவுகூறுமுகமாக ஞாபக சின்னம் ஒன்றையும் பரிசளித்தார்.
தூதுவர், தாய்நாட்டை பிரதிநிதித்துவம் செய்து, சர்வதேச நிகழ்வொன்றில் நாட்டிற்கு பெருமை சேர்த்ததுடன், இலங்கைக்கென ஒதுக்கப்பட்டிருந்த தினத்தில், நாட்டின் கலாசாரத்தினை செம்மனே காட்சிப்படுத்திய சாரணர் குழுவிற்கு தனது பாராட்டை தெரிவித்தார். மேலும், கொரியப்பயணத்தின் போது அவர்களின் நெகிழ்ச்சியான தன்மை, வெவ்வேறான சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை தகைமைப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் போன்றவற்றை பாராட்டியதுடன், பிரதான ஆணையாளர் ஜனப்ரித் பெர்னாண்டோ, சர்வதேச ஆணையாளரும் சாரண இயக்கக்குழுத் தலைவருமான டாக்டர். ரஜீவ பீரிஸ், முகாமைத்துவம் மற்றும் அலகு தலைவர்கள் போன்றோர், 25 ஆவது உலக சாரணர் மகிழ்ச்சிக்கூட்டத்தில் இலங்கையின் பங்களிப்பை வெற்றிகரமானதொன்றாக தயார்படுத்துவதற்காக எடுத்த முயற்சியை பாராட்டினார்.
பிரதான ஆணையாளர் ஜனப்ரித் பெர்னாண்டோ, இலங்கை சாரணர் சங்கத்தின் பாராட்டு சின்னத்தை தூதுவருக்கு பரிசளித்தார். அவர் மேலும் தூதுவருக்கும், சோல் நகரிலுள்ள இலங்கைத்தூதராக அதிகாரிகளுக்கும், அவர்களின் தரப்பிலிருந்து இலங்கை சாரணர் குழுவின் கொரியப்பயனத்தின்போது வழங்கப்பட்ட சகல உதவிகளுக்கும், தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
இலங்கை சாரணர் குழு 2023 ஆகஸ்ட் 16 அன்று கொரியக்குடியரசிலிருந்து தம் நாடு நோக்கி புறப்பட்டனர்.
இலங்கை தூதரகம்
சோல் நகரம்
2023 ஆகஸ்ட் 18