இலங்கைத் திரைப்படமான 'தி நியூஸ்பேப்பர்' ரியாத்தில் திரையிடப்பட்டது

 இலங்கைத் திரைப்படமான ‘தி நியூஸ்பேப்பர்’ ரியாத்தில் திரையிடப்பட்டது

சர்தா கொத்தலாவல மற்றும் குமார திரிமதுர இயக்கிய இலங்கைத் திரைப்படமான 'தி நியூஸ்பேப்பர்', 2022 டிசம்பர் 15ஆந் திகதி இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தூதுவர் தெரிவு - திரைப்பட விழா' வின் ஒரு பகுதியாக, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட  பல வதிவிடத் தூதரகங்களுடன் கூட்டு சேர்ந்து, சவுதி அரேபியாவில் திரையிடப்பட்டது. ரஷ்யாவில் நடைபெற்ற 18வது கசான் சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களுக்கான விருதை இப்படம் வென்றது.

திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னர், சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா இலங்கையின் திரைப்படத் துறை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை வழங்கினார். 1925ஆம் ஆண்டு முதல் இலங்கை மௌனத் திரைப்படமான 'ராஜகிய விக்ரமய' திரையிடப்பட்ட காலத்திலிருந்து திரைப்படத் துறையின் வரலாறு ஆரம்பமானது என தூதுவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் சவூதி அரேபியாவிலிருந்து ஷம்ஸ் அல்-மஆரிஃப், இந்தியாவைச் சேர்ந்த பரேலி கி பர்ஃபி, அமெரிக்காவிலிருந்து கோடா, அவுஸ்திரேலியாவின் தி சஃபியர்ஸ் (2012) மற்றும் மெக்சிகன் திரைப்படமான ஃப்ரிடா போன்ற பல பாராட்டப்பட்ட மற்றும் புகழ்பெற்ற திரைப்படங்கள் உட்பட பல்வேறு வகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், சவூதிப் பிரஜைகள், இலங்கை சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோர் என பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

ரியாத்

2022 டிசம்பர் 16

Please follow and like us:

Close